12593 – சடமும் கதிர்ப்பும்.

ஈ.ஜே.சற்குணராஜா. திருக்கோணமலை: கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சு, வடக்கு-கிழக்கு மாகாணம், 1வது பதிப்பு, ஜுலை 1997. (திருக்கோணமலை: பதிப்பகத் திணைக்களம், வடக்கு-கிழக்கு மாகாணம்).

(12) 92 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 80., அளவு: 21×17 சமீ.

சடமும் கதிர்ப்பும் பற்றிய முக்கிய பௌதிகவியல் எண்ணக்கருக்களை கற்க விரும்புவோருக்கான நூல். க.பொ.த. உயர்தர பாடத்திட்டத்தின்அடிப்படையில் எழுதப்பட்டிருப்பதுடன் நவீன பௌதீகத்தினதும் கருப் பௌதிகத்தினதும் அடிப்படை விடயங்களையும் விபரிக்கின்றது. சடமும் கதிர்ப்பும் சம்பந்தமான அடிப்படை எண்ணக்கருக்கள் மற்றும் கொள்கைகள் பற்றிய தர்க்கரீதியானதும் தெளிவானதுமான அறிமுகத்தை வழங்குகின்றது. வெப்பக் கதிர்ப்பு, ஒளி மின் விளைவு, சடத்தின் அலை இயல்பு, எக்ஸ் கதிர்கள், கதிர் தொழிற்பாடு ஆகிய ஐந்து பிரதான இயல்களில் சடமும் கதிர்ப்பும் பற்றிய இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 37483).

ஏனைய பதிவுகள்