12595 – உயர் தர மாணவர் பௌதிகம் : ஒளியியல் .

அ.கருணாகரர். யாழ்ப்பாணம்: சிறீ சுப்பிரமணிய பொத்தகக் களஞ்சியம், 235, காங்கேசன்துறைச் சாலை, 2வது பதிப்பு, 1994. (யாழ்ப்பாணம்: சிறீ சுப்பிரமணிய அச்சகம், 63, டீ.யு. தம்பி ஒழுங்கை).

(4), 224 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 100., அளவு: 21×14 சமீ.

இந்நூல் புதிய பாடத்திட்டத்துக்கு அமைய எழுதப்பட்ட பௌதிகவியல் பாடநெறி யின் ஒளியியல் பகுதியைக் கொண்டதாகும். ஒன்பது அத்தியாயங்களில் எழுதப்பட்டுள்ள இந்நூல் ஒளியும் நேர்கோட்டுச் செல்லுகையும், தளமேற்பரப்புக் களில் தெறிப்பு, கோளவாடிகளில் தெறிப்பு, தளமேற்பரப்புகளில் ஒளி முறிவு, அரியங்களினூடு முறிவு, நிறப்பிரிக்கையும் திருசியங்களும், வளைந்த கோள மேற்பரப்பில் முறிவு, கமரா, கண், கண்ணின் குறைபாடுகள், ஒளியியற் கருவிகள் ஆகிய அத்தியாயத் தலைப்புக்களில் ஒளியியல் பாடவிளக்கங்களை உள்ளடக்கி யுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 40394).

ஏனைய பதிவுகள்

12397 – சிந்தனை: தொகுதி I இதழ் 2 (ஆடி 1983).

சி.க.சிற்றம்பலம் (இதழாசிரியர்). யாழ்ப்பாணம்: கலைப்பீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, ஜுலை 1983. (யாழ்ப்பாணம்: மகாத்மா அச்சகம், ஏழாலை மேற்கு, ஏழாலை). (7), 154 பக்கம், அட்டவணைகள், விலை: ஆண்டு சந்தா ரூபா

14820 வேரும் விழுதும்.

செ.யோகநாதன். சென்னை 600030: என்.டி.எஸ்.பதிப்பகம், 32, கிழக்கு பூங்கா சாலை, ஷெனாய் நகர், 1வது பதிப்பு, செப்டெம்பர் 1993. (சென்னை 600005: ஜீவோதயம் அச்சகம், 65, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை). viii, 120 பக்கம், விலை:

12731 – மாணவர் கட்டுரைக் களஞ்சியம்.

லீலாதேவி ஆலாலசுந்தரம். கொழும்பு 6: இலக்கியன் வெளியீட்டகம், குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2017. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). 46 பக்கம்,

14043 கற்பு நிலை.

யாழ்ப்பாணத்துச் சுவாமிகள் (மூலம்). புதுவை: கலாநிதி பிரஸ், 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (புதுவை: கலாநிதி பிரஸ்). 129 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ. மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் ஞானகுருவாகக்