12597 – உயர்தர மாணவர் பௌதிகம்: மின்னியல்.

அ.கருணாகரர். யாழ்ப்பாணம்: மாசில் பதிப்பகம், வை.எம்.சீ.ஏ. கட்டிடம், மேல்மாடி, ஈச்சமோட்டை, 2வது பதிப்பு, 1979. (யாழ்ப்பாணம்: நாமகள் அச்சகம், 319, காங்கேசன்துறை வீதி).

(4), 268 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 70., அளவு: 20.5×14 சமீ.

இந்நூல் புதிய பாடத்திட்டத்துக்கு அமைய எழுதப்பட்ட பௌதிகவியல் பாடநெறியின் மின்னியல் பகுதியைக் கொண்டதாகும். மின்னியல் கணியங்கள் யாவும் ளுஐ அலகுக்கேற்ப வரையறுக்கப்பட்டுள்ளன. ஒன்பது இயல்களாக வகுக்கப்பட்டு அவற்றில் நிலை மின்னியல் அடிப்படைத் தோற்றப்பாடுகள், நேர்-எதிர் ஏற்றங்கள், அழுத்தம் கொள்ளளவு ஒடுக்கிகள், ஓட்ட மின்னியல், கலங்கள் மின்னோட்டத்தினால் ஏற்படும் காந்தவிளைவு, கல்வனோமானி, மின் இயக்கவியல், கடத்தியில் தொழிற்படும் விசை, இயங்குசுருள் கல்வனோமானி, புவிக்காந்தவியல், காந்தமானிகள், மின் கணியம், ஓமின் விதி, தடை-தற்றடை, கெச்சோவின் விதி, உவீத்தனின் பாலம், அழுத்தமானி, மின்னோட்டத்தினால் ஏற்படும் இரசாயன விளைவு பரடேயின் மின் பகுப்பு விதிகளும் பரிசோதனைகளும், மின்னோட்டத்தினால் ஏற்படும் வெப்பவிளைவு, யூலின் விதிகளும் பரிசோதனை களும், மின்காந்தத் தூண்டல், தூண்டற் சுருள் மாற்றி தைனமோ, நேரோட்ட மோட்டர், வெப்ப மின்னோட்டம் ஆகிய மின்னியல்சார் பாடங்கள் உள்ளடக்கப் பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 40395).

ஏனைய பதிவுகள்

14759 காமமே காதலாகி.

இ.தியாகலிங்கம். நோர்வே: இ.தியாகலிங்கம், Tyristubbveien 77, 0687 Oslo, 1வது பதிப்பு செப்டெம்பர் 2016. (மின்நூல் வடிவமைப்பு lulu.com சுய வெளியீடு உதவி). 253 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 21×14.5 சமீ., ISBN:

14491 இந்தியக் கலை-1.

உ.நவரத்தினம் (பதிப்பாசிரியர்). மஹரகம: தொலைக்கல்வித் துறை, தேசிய கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 1993. (கொழும்பு: யூ.ஆர்.ஜீ. பிரின்டர்ஸ்). 76 பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 27×21.5 சமீ. சித்திரக்கலை ஆசிரியர்களுக்கான கல்விப்

12931 – சுவடுகளும் நினைவுகளும்: சில பதிவுகள்.

செ.இளங்குமரன் (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: பேராசிரியர் செ.இளங்குமரன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, டிசம்பர் 2012. (யாழ்ப்பாணம்: கரிகணன் தனியார் நிறுவனம், இல. 424, காங்கேசன்துறை வீதி). 111 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: