அ.கருணாகரன். கொழும்பு 15: அ.கருணாகரன், அபிராமி பதிப்பகம், இல. 68யு, எலிஹவுஸ் வீதி, திருத்திய 2வது பதிப்பு, பெப்ரவரி 2000, 1வது பதிப்பு விபரம் தரப்படவில்லை. (கொழும்பு 13: யுனைட்டட் மேர்ச்சன்ட்ஸ் லிமிட்டெட், 529/19,புளுமெண்டால் ரோட்).
(6), 111 பக்கம், விலை: ரூபா 160., அளவு: 25×18.5 சமீ
க.பொ.த. உயர்தர வகுப்புகளுக்குரிய பௌதிகவியல் நூல் தொடரில் வெளிவந்துள்ள ஆறாவது அலகில் ஓட்ட மின்னியல், தடை, தடைத்திறன், ஓமின் விதி, ஓட்டத்தின் வெப்ப விளைவு, மின் முதல்கள், மின் இயக்கவிசை ஓட்டம், கேச்சொவின் விதிகள், மின்காந்தத் தூண்டல் ஆகிய பாடங்களும் பல்தேர்வு வினா-விடைகளும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வை யிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 30135).