மார்க்கோணி தொழில்நுட்ப நிறுவனம். கொழும்பு 6: மார்க்கோணி தொழில்நுட்ப நிறுவனம், இல. 410, 2ஆம் மாடி, காலி வீதி, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, ஜுலை 2005. (கொழும்பு 6: எஸ். பிரின்ட்ஸ்).
x, 134 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 230., அளவு: 22×15 சமீ., ISBN: 955-1287-00-2.
வயர்லஸ் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட பல்வேறு உபகரணங்களின் பயன்பாடு, பராமரிப்பு, பாதுகாப்பு தொடர்பான தொழில்நுட்ப அடிப்படை அறிவை வழங்கும் வகையில் போதிய விளக்கப்படங்களுடன் இக்கையேடு தயாரிக்கப்பட்டுள்ளது. உள்ளடக்கப்பட்டுள்ள மின் சாதனங்கள், பாவனையாளர்களுக்கான மின் அலகுகள், ஸ்ரீரியோ மற்றும் னுவுளு என்றால் என்ன?, மின்சாதனங்களுக்குரிய இணைக்கும் பகுதிகள், மின்னியல் இலத்திரனியல் உதவிச் சாதனங்கள், பாவனையாளர்களுக்குரிய அடிப்படை மின்னியல் அறிவு, மின் தாக்கப்பட்ட ஒருவருக்கான முதல் உதவி, மின் விரயத்தினைக் குறைப்பதற்கான வழிகள், மின்னியல் அருஞ்சொற்களின் களஞ்சியம், பாவனையாளருக்குரிய மின் குறியீடுகள், கணனி மாணவர்களுக்கான அருஞ்சொற்கள், மின்சாதனங்களைத் திருத்துவதில் சிக்கல்கள், கோகுலம் சிறுவர்கள், மார்க்கோணியின் தொழில் நடவடிக்கைகள் ஆகிய 14 அத்தியாயத் தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 36803).