12602 – பௌதிக இரசாயனம்: பகுதி 1:வாயுக்களின் நடத்தைக் கோலங்கள்.

தம்பையா சத்தீஸ்வரன். யாழ்ப்பாணம்: திருமதி சுபாசினி சத்தீஸ்வரன், 108, பிறவுன் வீதி, 1வது பதிப்பு, 1989. (யாழ்ப்பாணம்: சுவர்ணா பிரிண்டிங் வேர்க்ஸ், 295ஃ7, காங்கேசன்துறை வீதி).

(4), 74 பக்கம், விலை: ரூபா 60., அளவு: 21×14 சமீ.

இந்நூல் சடப்பொருள்களின் இயக்கவியல் பற்றிய அறிமுகம், வாயு விதிகள், வாயுவிதிகளை இணைத்தலும் இலட்சிய வாயுச் சமன்பாடும் வாயு மாறிலி சு-ஐக் கணித்தலும், இலட்சிய வாயுக்களும் உண்மை வாயுக்களும், வாயுச்சமன்பாட்டில் இருந்து விலகல், இலட்சிய வாயுச் சமன்பாட்டின் பிரயோகங்கள், இலட்சிய வாயுச் சமன்பாட்டில் கணிப்புகள், வாயுக்கலவைகள் பகுதி அமுக்கம், வாயுக்கள் பற்றிய இயக்கவியல் மூலக்கூற்றுக் கொள்கை, இயக்கவியல் வாயுச் சமன்பாடு, வாயுக்களைத் திரவமாக்கல், வெப்பக்கூட்டப் பிரிகை, சுயமதிப்பீட்டு வினாக்களின் விடைகள் ஆகிய 13 அத்தியாயங்களில் கட்டமைக்கப்பட்டுள்ளது. நூலாசிரியர் காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலையில் இரசாயினியாகப் பணியாற்றியவர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 33096)

ஏனைய பதிவுகள்