12604 – சமுத்திரவியல்.

ஏ.எஸ்.ஆனந்தன். யாழ்ப்பாணம்: உயர்கல்விச் சேவை நிலையம், 12/1, வடக்கு புகையிரத வீதி, 2வது பதிப்பு, 2003, 1வது பதிப்பு, 2001. (யாழ்ப்பாணம்: உயர்கல்விச் சேவை நிலையம்).

vi, 151 பக்கம், விளக்கப்படங்கள், அட்டவணைகள், விலை: ரூபா 190., அளவு: 20.5×14.5 சமீ.

இந்நூல் அறிவியல்முறையில் சமுத்திரவியலை பல்வேறு கூறுகளாகவும் அணுகித் தெளிந்த அறிவைப்பெற வழிகாட்டுகின்றது. இந்நூலின் முதற்பகுதி அறிமுகம், கடலடி நிலவுருவவியல், நீரின் இயல்புகள், கடலின் அசைவுகள், சமுத்திரச் சூழல் தொகுதிகள், சமுத்திரங்களின் உணவுத் தொடர்கள், சமுத்திரச் சூழல் மாசடைதலும் விளைவுகளும் ஆகிய ஏழு அத்தியாயங்களின் வழியாக சமுத்திரவியல் பற்றிய பரந்து விரிந்த அறிவையும், இரண்டாம் பகுதி, அறிமுகம், துறைரீதியான உற்பத்தி, தலா நுகர்வும் ஏற்றுமதி இறக்குமதியும், மீன்பிடி உபகரணங்களின் வகுப்பாக்கம் ஆகிய நான்கு அத்தியாயங்களின் வழியாக மீன்பிடித் தொழிலை விருத்தி செய்யும் வழிகளை வழங்குகின்றது. பின்னிணைப்பு களாக மீன்பிடி அபிவிருத்தி நிறுவனங்களும் பணிகளும், உசாத்துணை நூல்கள், இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் முக்கிய மீன் இனங்கள் ஆகியவற்றையும் ஆசிரியர் தந்துள்ளார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வை யிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 36007).

ஏனைய பதிவுகள்