எஸ்.அன்ரனி நோர்பேட். கொழும்பு 6: தர்ஷனா வெளியீடு, 58-1ஃ3, 37ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு மார்ச் 1997. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48டீ, புளுமெண்டால் வீதி).
(12), 176 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 175., அளவு: 21.5×14 சமீ., ISBN: 955-96132-2-7.
வளிமண்டல இயக்கம் (வளிமண்டல இயக்கம், காற்றுக்களும் அமுக்கச் சாய்வுகளும், ஒருங்குதலும் விரிதலும், புவியின் மேற்பரப்புக் காற்றோட்டங்கள், பூகோளத்தின் அமுக்கப்பாங்குகள், ஓரிடக் காற்றுக்கள், இடை அயன ஒருங்கல் வலயம், மொன்சூன் சுற்றோட்டம், வளித்திணிவுகள், பிரிதளங்கள்), அயனப் பிரதேச வானிலை ஒழுங்குகள் (அயனப் பிரதேச வானிலை, அயனச் சுற்றோட்டங் களின் ஒழுங்கற்ற தன்மைகள், அயனக் குழப்பங்கள்), வளிமண்டலப் பொதுச் சுற்றோட்டம் பொதுச்சுற்றோட்டத்துக்கான காரணங்கள், வளிமண்டலப் பொதுச் சுற்றோட்ட மாதிரிகள், அலைக் கோட்பாட்டு அணுகுமுறை, பிரச்சினைகளும் எதிர்கால நிலைமைகளும்), காலநிலைப் பாகுபாடும் பிரதேசக் காலநிலைகளும் (அறிமுகம், கெப்பனின் காலநிலைப் பாகுபாட்டுத் திட்டம், தொண்வைற்றின் காலநிலைப் பாகுபாடுகள்), கெப்பனின் காலநிலைப் பிரிவுகள் (அயன்மழைக் காலநிலை, வரண்ட காலநிலைகள், சூடான வெப்ப மழைக் காலநிலைகள், குளிரான பனிக்காட்டுக் காலநிலைகள், முனைவுக் காலநிலைகள்) ஆகிய ஐந்து இயல்களில் காலநிலையியல் பற்றிய விரிவான விளக்கம் தரப்பட்டுள்ளது. (இந் நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 23277).