12608 – இயைபாக்கமும் ஒரு சீர்திட நிலையும்: உயிரியல் புதிய பாடத்திட்டம்.

வீ.ச.சிவகுமாரன். கொழும்பு 6: வேதா சிவகுமாரன், 6/1, டாக்டர் ஈ.ஏ.கூரே மாவத்தை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, 2010. (கொழும்பு: கிரிப்ஸ்).

128 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 325., அளவு: 21.5×15 சமீ., ISBN: 978-955-1475-00-3.

இயைபாக்கமும் ஒரு சீர்திட நிலையும் (Coordination and Homeostasis) என்ற தலைப்பிலான இவ்வுயிரியல் நூல், இயைபாக்கம், விலங்குகளின் நரம்புத் தொகுதியின் ஒழுங்கமைப்பு, மனிதனின் நரம்புத் தொகுதி, மனித மூளையின் அமைப்பு, புலன் அங்கங்கள், கண் அமைப்பும் தொழிற்பாடும், செவி அமைப்புமதொழிற்பாடும், மனிதனின் அகஞ்சுரக்கும் தொகுதி, ஒருசீர்த்திடநிலை, மனிதனின் தோல் ஆகிய 10 அத்தியாயங்களைக் கொண்டுள்ளது. உயர்தர உயிரியல் புதிய பாடத்திட்டத்தின் ஏழாம் அலகின் அனைத்து தேர்ச்சி மட்டங்களுக்கும் அமைவாக இந்நூல் எழுதப்பட்டுள்ளது. இயைபாக்கத்தின் வகைகளும் அவற்றின் உடற்றொழிலியல் தன்மைகளும் தெளிவாக விபரிக்கப்பட்டுள்ளன. மொத்தக் கட்டமைப்புகளின் விபரிப்புகள், படங்கள் என்பன பரீட்சை நோக்கில் அமைக்கப் பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 49485).

ஏனைய பதிவுகள்

Immortal X bitcoin casinos canada

Articles Gamble Immortal Interest in 100 percent free Inside Demo Function Diablo Immortal Multiplayer: Ideas on how to Fool around with Family members It is