12608 – இயைபாக்கமும் ஒரு சீர்திட நிலையும்: உயிரியல் புதிய பாடத்திட்டம்.

வீ.ச.சிவகுமாரன். கொழும்பு 6: வேதா சிவகுமாரன், 6/1, டாக்டர் ஈ.ஏ.கூரே மாவத்தை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, 2010. (கொழும்பு: கிரிப்ஸ்).

128 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 325., அளவு: 21.5×15 சமீ., ISBN: 978-955-1475-00-3.

இயைபாக்கமும் ஒரு சீர்திட நிலையும் (Coordination and Homeostasis) என்ற தலைப்பிலான இவ்வுயிரியல் நூல், இயைபாக்கம், விலங்குகளின் நரம்புத் தொகுதியின் ஒழுங்கமைப்பு, மனிதனின் நரம்புத் தொகுதி, மனித மூளையின் அமைப்பு, புலன் அங்கங்கள், கண் அமைப்பும் தொழிற்பாடும், செவி அமைப்புமதொழிற்பாடும், மனிதனின் அகஞ்சுரக்கும் தொகுதி, ஒருசீர்த்திடநிலை, மனிதனின் தோல் ஆகிய 10 அத்தியாயங்களைக் கொண்டுள்ளது. உயர்தர உயிரியல் புதிய பாடத்திட்டத்தின் ஏழாம் அலகின் அனைத்து தேர்ச்சி மட்டங்களுக்கும் அமைவாக இந்நூல் எழுதப்பட்டுள்ளது. இயைபாக்கத்தின் வகைகளும் அவற்றின் உடற்றொழிலியல் தன்மைகளும் தெளிவாக விபரிக்கப்பட்டுள்ளன. மொத்தக் கட்டமைப்புகளின் விபரிப்புகள், படங்கள் என்பன பரீட்சை நோக்கில் அமைக்கப் பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 49485).

ஏனைய பதிவுகள்

14590 ஒரு சென்ரி மீட்டர் சிரிப்பு பத்து செகன்ட் கோபம்.

ஜே.பிரோஸ்கான். கிண்ணியா 3: ஜே.பிரோஸ்கான், பேனா பப்ளிக்கேஷனஸ், 92/4, உமர் ரழி வீதி, மஹ்ரூப் நகர், 1வது பதிப்பு, ஏப்ரல் 2013. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், இல. 44, புகையிரத நிலைய வீதி). 104 பக்கம்,

14834 உரைநடைச் சிலம்பு (பரல்-க).

தொகுப்பாசிரியர் குழு. சுன்னாகம்: வட-இலங்கைத் தமிழ்நூற் பதிப்பகம், 3வது பதிப்பு, வைகாசி 1949, 1வது பதிப்பு, மார்கழி 1940, 2வது பதிப்பு, தை 1942. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்). (4), 118 பக்கம், விலை: