12610 – உயிர்ப்பல்வகைமை Biodiversity.

வீ.ச.சிவகுமாரன். கொழும்பு 6: வீ.ச.சிவகுமாரன், இந்த மகளிர் கல்லூரி, 1வது பதிப்பு, நவம்பர் 2001. (கொழும்பு: சு.கிருஷ்ணமூர்த்தி, கிரிப்ஸ்).

(6), 122 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 175., அளவு: 21.5×14.5 சமீ.

க.பொ.த. உயர்தரம் உயிரியல் பாடத்திட்டத்துக்கு அமைவாக எழுதப்பட்ட நூல். அங்கிகளின் பாகுபாடு, பாகுபாட்டின் பிரிவுகளை இனம்காணுதல் பற்றிய அறிவு என்பன உயிர்ப்பல்வகைமை பற்றிக் கற்றலின் அடிப்படையான பகுதியாகும். உயிர்ப்பல்வகைமைக் கூர்ப்பு என்னும் பகுதியில் தொல்லுயிரியலின் அடிப்படைகள் எடுத்துக்காட்டப் படுகின்றது. உயிர்ப்பல்வகைமையின் முக்கியத்துவங்களும் அதனைப் பேணும் நடவடிக்கைகளின் அடிப்படைகளும் இலகுவாக விளங்கக்கூடிய வாறு பொருத்தமான உதாரணங்களுடன் இந்நூலில் தரப்பட்டுள்ளது. இவற்றை உயிர்ப்பல்வகைமை, உயிரினப்பாகுபாடு, ஆழநெசயகளும் Pசழவளைவயகளும், விலங்குகளின் பல்வகைமை, தாவரப் பல்வகைமை, உயிர்ப்பல்வகைமையின் கூர்ப்பு, உயிர்ப் பல்வகைமையின் முக்கியத்துவம், அழிவுச் செயற்பாடுகள், உயிர்ப்பல்வகைமைக் காப்பு, இலங்கையின் உயிர்ப்பல்வகைமை ஆகிய 10 அலகுகளில் இந்நூல் விரிவாக எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 38925).

ஏனைய பதிவுகள்