12617 – பருவமானவர்கள்.

பெக்கி மோகன் (மூலம்). க.நடனசபாபதி (தமிழாக்கம்). கொழும்பு 11: தேசிய கலை இலக்கியப் பேரவை, வசந்தம் புத்தக நிலையம், இல. ளு44, 3வது மாடி, CCSM Complex, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2002. (கொழும்பு 13: கௌரி அச்சகம், 207, ஆட்டுப்பட்டித் தெரு).

xvi, 128 பக்கம், விலை: ரூபா 175., அளவு: 21ஒ14 சமீ., ISBN: 955-8637-10-6.

இந்நூல் பருவமடைதல் (Adolescence) தொடர்பான அனைத்து விடயங்களையும் பேசாதபோதிலும் பாலியலுறவு பற்றிய அடிப்படை உண்மைகளைப் பேசுகின்றது. பருவமானவர்கள், உடல் மாற்றங்கள் (பெண்கள்), உடல் மாற்றங்கள் (ஆண்கள்), பாலியலும் அது தொடர்பான பிறவும், அபாயங்களும் முரண்களும், பெற்றோருக்கு ஆகிய ஆறு இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. பருவமானவர்களும் அவர்களின் பெற்றோர்களும் மாத்திரமன்றி ஆசிரியர்களும், இளைய தலைமுறையினருடன் தொடர்புள்ள ஒவ்வொருவருக்கும் ஏற்ற விடயங்கள் இதில் அடங்கியுள்ளன. நூல் கேள்வி பதில் வடிவில் எழுதப்பட்டிருப்பதால் வாசகரோடு நேரடியாகப் பேசுவது போல் அமைகின்றது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 133409ஊஊ).

ஏனைய பதிவுகள்

12976 – வன்னியில் தமிழரசு: சிம்மக்குரலோன் செல்லத்ததம்பு அரச பேரவையில் ஆற்றிய உரைகள்.

சேவியர் மார்க் செல்லத்தம்பு (மூலம்), த.ம.பீற்றர் பொன்கலன்ட் (தொகுப்பாசிரியர்). நெடுங்கேணி: த.ம.பீற்றர் பொன்கலன்ட், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1973. (கொழும்பு: அருளொளி அச்சகம்). 32 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 19 x 13.5