12619 – நலம் பேணல் விஞ்ஞானம்(Text book of Nursing).

அ.சின்னத்தம்பி. கண்டி: ஊற்றுப் பிரசுரம், மருத்துவ வெளியீடு, 154, கொழும்பு வீதி, 1வது பதிப்பு, நவம்பர் 1972. (கொழும்பு 12: குமரன் அழுத்தகம், 201 டாம் வீதி).

xii, 399 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 12.50, அளவு: 21×14 சமீ.

இந்நூல் நோயாளி நலம்பேணற் கலை, நோயாளிகளும் (Patient) நலம்பேணிகளும் (Nurses), பிணிதீர் மனை, பிணிதீர்மனையும் தனிநோயாளியும், நலம்பேணிகள் (நல்லி, நல்லாள்), ஒழுக்கவிதிகள், தொழிலியல், மனைக்குரிய காவறை வேலை, காவறை, அடுக்களை, ஆகியவற்றில் புழங்கும் சாமான்கள், காவறைக்குப் பணிக்கு வேண்டிய தளவாடங்கள், படுக்கையமைத்தல், படுக்கைப்பட்ட நோயாளியின் மெத்தையை மாற்றல், நோயாளியின் பொதுமுறை நலம் பேணல், படுக்கை நீராட்டல், உணவு ஊட்டலும் சமைத்தலும், நோயாளியின் நீர் தேவைப்பாடும் பாயிச் சமனிடையும், சாரக உடல்நிலை நோக்கல்கள், கடிசளி, வாந்தி, ஊறுநீர் (சலம்), மலம் ஆகியவற்றை நோக்கல், மருந்துப் பொருட்கள், ஒட்சிசன் வழங்கல், சோதனைகளும் ஆய்வுகளும், எனிமாக்களும் உள்ளிடையங்களும், அலசல், கதீத்தற் செய்கை, செயற்கை ஊண்களும் குழாய் உணவூட்டலும், கிருமியழிப்புசசெய்தல், காவறை அணியங்கள், காவறையில் குறுக்குத் தொற்றும் நல்லியும், அறுவை வினைக்கு முன்னம் நலம் பேணலும் அதன் பின்னர் நலம்பேணலும், கட்டுதலும் கட்டுக்களும் (பந்தனங்கள்), தோலுக்கு இடப்படும் தீர்வு முறைகள், ஒரிட மருந்திடல் முறைகள், மட்டைகளும் சாந்து மட்டைகளும்-நீட்டலும், சில தீர்வுச் செயல்முறைகளும் ஊடறிதற் செயல்முறைகளும், அறுவை வினையறை இயங்கும் முறை, ஏனைய தீர்வு முறைகள், பொதுவாக காவறையில் காணப்படும் சில நோய்களும் நோயாளரின் நலம் பேணலும், தொட்சி நிலைமைகள், சிலஅறுவைவினை நிலைமைகள், பெண் நோய்களில் நலம்பேணல், காது நாசி தொண்டை சோதித்தல், உடல்நலமுடைய குழந்தை, கைமகவுக்கு உணவூட்டல், முதலுதவி, எரிகாயங்கள், குருதிவாரி, அல்துடிப்புயா, இதய நிறுத்தம், நஞ்சூட்டல், என்பு முறிவுகள், புறப்பொருள் உடலிகளால் கெடுதிகள், சாவு ஆகிய 52 அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. அயனாந்த தேச நோய்கள், மகப்பேற்று மருத்துவம் ஆகிய நூல்களை எழுதியுள்ள பேராசிரியர் அ.சின்னத்தம்பி அவர்கள் ஒரு பெண்நோயியல் அறுவைச் சிகிச்சை வைத்தியராவார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 2830).

ஏனைய பதிவுகள்

12934 – நீர்வேலி ஸ்ரீலஸ்ரீ சிவ-சங்கரபண்டிதர் சரித்தரம்.

ச.குமாரசுவாமிக் குருக்கள். யாழ்ப்பாணம்: ஸ்ரீலஸ்ரீ சிவ-சங்கரபண்டிதர் ஞாபகார்த்த சபை, 1வது பதிப்பு, ஜய வருடம் சித்திரை 1954. (யாழ்ப்பாணம் ஸ்ரீகாந்தா அச்சகம்). xvi, 42 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18.5 x 13

14810 லைலா மஜ்னு.

முஹம்மது ஸெயின். கொழும்ப 14: முஹம்மது ஸெயின், ஸெயின்ஸ்தான் டிரேடிங் கம்பெனி லிமிட்டெட், 703, சிரிமாவோ பண்டாரநாயக்க மாவத்தை, 1வது பதிப்பு, 1977. (கொழும்பு 3: த டயமண்ட் பிரின்டர்ஸ், 41, செயின் மைக்கல்