12623 – எயிட்சிலிருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி?

அ.பொ.செல்லையா. சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, இல.7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2003. (சென்னை 94: ஸ்கிரிப்ட் ஆப்செட்).

188 பக்கம், விலை: இந்திய ரூபா 45., அளவு: 18×12.5 சமீ.

இதயம் நடுங்க வைக்கும் எயிட்சு, இரகசியத்தைப் பேணி மருத்துவத்தைப் பெறவேண்டும், யார் வாங்குகிறார்கள் யார் கொடுக்கிறார்கள்? இருவகையான உணர்வுகள், அதிர்ச்சி தரத்தக்க செய்தி, எந்தப் பொருத்தம் முக்கியம், அறியாமை தெரியாமை அதிகம் பாதிக்கிறது, கிழக்கு ஐரோப்பாவில் எயிட்சு, காம உணர்வுக்கு எல்லைபோடமுடியுமா?, எயிட்சும் இறப்பு விகிதமும், எயிட்சு ஆரம்பம் எப்போது?, எயிட்சு என்றால் என்ன, எயிட்சு வியாதியால் வருகிறதா?, நோய் பரப்பும் நுண்கிருமிகள், எயிட்சின் வகைகள், எயிட்சு கண்டபிடிக்கப்பட்டது எப்போது?, காமத்துக்கு கண் உண்டா இல்லையா?, உடலைப் பாதுகாக்கும் சீவ அணுக்கள், மருத்துவ பரிசோதனை அவசியம் தேவை, இனப்பெருக்கத்தில் பல நிலைகள், உண்ணாவிரதம் ஒத்துக்கொள்ளாது, பல தொற்றுநோய்களும் பாதிப்புத் தரலாம், எயிட்சின் அடையாளக்குறிகள், எயிட்சு சுயபரிசோதனையும் தடுப்பும், வருமுன் தடுப்பது அவசியம், எயிட்சு போன்ற வேறு நோய்கள், கலை கொலையாகலாமா?, உலக எயிட்சு நாள் ஆகிய 28 அத்தியாயங்களில் இந் நூல் எழுதப்பட்டுள்ளது. அரிமா சங்கத்தின் இலங்கைக் கிளையின் அங்கத்தவராக விருந்த விஞ்ஞானப் பட்டதாரியான நூலாசிரியர், பின்னாளில் கனடாவில் புலம்பெயர்ந்து வாழ்ந்தவர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 33222).

ஏனைய பதிவுகள்

Darmowe Automaty Hazardowe 77777

Content Dokąd Potrafię Poznać Szczegóły Na temat Bonusu Wyjąwszy Depozytu? Albo W Automatach Egipskich Można Odgrywać Na temat Bardziej wartościowe Wygrane? Jak Wskazane jest Odgrywać

14524 பிள்ளை நிலா: சிறுவர் பாடல்கள்.

செல்லையா குமாரசாமி. யாழ்ப்பாணம்: செ.ல்லையா குமாரசாமி, நாவற்குழி மேற்கு, கைதடி, 1வது பதிப்பு, ஏப்ரல் 2018. (யாழ்ப்பாணம்: வைரஸ் கிரப்பிக்ஸ், இணுவில்). (8), 60 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 200., அளவு: 25×18

14996 அயோத்தியிலிருந்து இலங்கை வரை.

கி.ராதாகிருஷ்ணன். சென்னை 600017: திருமகள் நிலையம், 55, வெங்கட்நாராயணா ரோடு, தி.நகர், 1வது பதிப்பு, ஜுன் 1985. (சென்னை 600033: தென்றல் பிரிண்டர்ஸ்). ii, 268 பக்கம், விலை: இந்திய ரூபா 21.00, அளவு: