12625 – நீரிழிவு வியாதியும் அது பற்றிய சில அனுபவக் குறிப்புகளும்.

மருதூர் ஏ.மஜீத்.சாய்ந்தமருது 3: மருதூர் வெளியீட்டுப் பணிமனை, 436, பழைய சந்தை வீதி,சாய்ந்தமருதூர், கல்முனை, 1வது பதிப்பு, நவம்பர் 1997. (கல்முனை: இளம்பிறைஓப்செற் அச்சகம், மருதமுனை).

55 பக்கம், விலை: ரூபா 60.00, அளவு: 18×12.5 சமீ.


சலரோகம் எனப்படும் நீரிழிவு நோய் பற்றிய விரிவான தகவல்களை வழங்கும் இந்நூல், நீரிழிவு நோயின் வரலாறு, நோயின் தன்மை, நோய் வருவதற்கான காரணங்கள், நோயின் வகை, நோயின் அறிகுறிகள், நோயாளிகள் கவனிக்க வேண்டியவை (நோய் பற்றிய அறிவு, உணவுக் கட்டுப்பாடு, மருத்துவப் பாவனை, தேகப்பயிற்சி), ஞாபகத்தில் வைத்திருக்கவேண்டிய குறிப்புகள், நீரிழிவுநோய் பற்றிய எனது ஒரு நாள் நடைமுறைகள், முடிவுரை ஆகிய அத்தியாயங்களில் அதனை விரிவாக விளக்குகின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில்
பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 31385).

ஏனைய பதிவுகள்

12896 – வைகுந்த திலகம்: ஆயர்பாடி ஆழ்வார் ஸ்ரீ வே.த.மயில்வாகனம் நினைவு மலர்.

மலர் வெளியீட்டுக் குழு. தெல்லிப்பழை: திருமதி லட்சுமி மயில்வாகனம் குடும்பத்தினர், ஆயர்பாடி, மாவிட்டபுரம், 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (அச்சக விபரம் தரப்படவில்லை). (2), 74 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை,