அ.சின்னத்தம்பி. யாழ்ப்பாணம்: பேராசிரியர் அ. சின்னத்தம்பி, மானிப்பாய், 1வது பதிப்பு, 1969. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்),
xvi, 488 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×13.5 சமீ.
மகப்பேற்று விஞ்ஞானம் ‘தாய்மைப்பேறு” அடைந்த பெண்களுக்கான நூல். இந்நூலில் உடற்கூற்று மருத்துவம் தொடர்பான செய்திகளைத் தமிழில் விளக்கி யுள்ளதுடன் ஒரு பெண் கர்ப்பம் தரித்த நாள்முதல் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பன போன்ற விடயங்களையும் மகப்பேற்று சிகிச்சை முறைகளையும் இந்நூல் விளக்குகின்றது. மருத்துவத் தாதிமார்களுக்கு ஏற்றவகையில் ஏராளமான குறிப்புகளுடன் எழுதப்பட்டுள்ளது. முறைமையான கருப்பநிலை, பிறழ்வான கருப்பநிலை, பேற்றுநிலையின் தொழிலும் அதன் நடையும், பிறழ்வான பேறுகள், பிள்ளைப்பேற்றுக் காலமும் புனிற்றுப்பேற்றுக் குழந்தையும், அறுவை வினை யாற்றலும் மற்றும் வினையாற்றல்களும், பிற்சேர்ப்பு ஆகிய ஏழு பகுதிகளையும் 46 இயல்களையும் இந்நூல் கொண்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 20920).