12629 – உடல்நல வாழ்வும் மூலிகை மருத்துவமும் உணவு வகைகளும்.

ஆ.சி.முருகுப்பிள்ளை. பருத்தித்துறை: விநாயகர் தரும நிதியம், தெணியம்மன் வீதி, வியாபாரி மூலை, புலோலி மேற்கு, 1 வது பதிப்பு, மார்ச் 1997. (பருத்தித்துறை: விநாயகர் தரும நிதிய அச்சகம், புலோலி மேற்கு).

(16), 150 பக்கம், விலை: ரூபா 39.00, அளவு: 21.5×14 சமீ.

பருத்தித்துறை விநாயகர் தரும நிதியத்தினரின், 16ஆவது மனிதசேவை வெளியீடாக அந்நிறுவனத்தின் தாபகரின் மருத்துவக் குறிப்புகளின் தொகுப்பாக இந்நூல் 21.11.1996 அன்று உருவாக்கப்பட்டு மார்ச் 1997இல் வெளியிடப்பட்டுள்ளது. விநாயகர் தரும நிதிய கணக்கு விபரம், தர்மசாதன விபரம், நூல் வெளியீட்டு விபரக் கணக்கறிக்கை ஆகியவற்றுடன் இந்நூல் ஆரோக்கிய வாழ்வும் அதற்குரிய மூலிகை மருந்துகளும், எய்ற்ஸ் நோய் தீர எளிய வழி, நலமான வாழ்விற்கு, இலைக்கஞ்சி, உடற் செயற்பாட்டு முறைகளுக்கான மூலிகை விபரங்கள், பழவகைகளும் அவற்றை உண்பதனால் அடையும் பலாபலனும், பதார்த்த குணவிபரம், நோய்களும் மருத்துவ சிகிச்சைகளும், அனுபவமுள்ள குடிநீர்வகைகள், உணவு வகைகளும் பயன்களும், ஏழுவகை உயிர்ச்சத்துகளின் அட்டவணை, விசக்கடி வைத்தியமும் மூலிகை மருத்துவமும் ஆகிய அத்தியாயங்களில் உடல்நல வாழ்வும் மூலிகை மருத்துவமும் உணவு வகைகளும் பற்றி விளக்கக் குறிப்புகள் தொகுக்கப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வை யிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 40263)

ஏனைய பதிவுகள்

11440 தொற்றா நோய்கள் பற்றிய விழிப்புணர்வுக் கையேடு.

சமுதாய மற்றும் குடும்ப மருத்துவத்துறை. யாழ்ப்பாணம்: மாகாண ஆரோக்கிய விழா-2016, வடமாகாண சுகாதார அமைச்சு, 1வது பதிப்பு, 2016. (யாழ்ப்பாணம்: குரு பிரிண்டர்ஸ், 39/2 ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி). 30 பக்கம், விளக்கப்படங்கள், அட்டவணைகள்,

Totally free Ports On line

Content Why must I Enjoy Totally free Slots? How come People Favor Slot machines No Download Otherwise Subscription? The Finest 5 Totally free Slot Video