12629 – உடல்நல வாழ்வும் மூலிகை மருத்துவமும் உணவு வகைகளும்.

ஆ.சி.முருகுப்பிள்ளை. பருத்தித்துறை: விநாயகர் தரும நிதியம், தெணியம்மன் வீதி, வியாபாரி மூலை, புலோலி மேற்கு, 1 வது பதிப்பு, மார்ச் 1997. (பருத்தித்துறை: விநாயகர் தரும நிதிய அச்சகம், புலோலி மேற்கு).

(16), 150 பக்கம், விலை: ரூபா 39.00, அளவு: 21.5×14 சமீ.

பருத்தித்துறை விநாயகர் தரும நிதியத்தினரின், 16ஆவது மனிதசேவை வெளியீடாக அந்நிறுவனத்தின் தாபகரின் மருத்துவக் குறிப்புகளின் தொகுப்பாக இந்நூல் 21.11.1996 அன்று உருவாக்கப்பட்டு மார்ச் 1997இல் வெளியிடப்பட்டுள்ளது. விநாயகர் தரும நிதிய கணக்கு விபரம், தர்மசாதன விபரம், நூல் வெளியீட்டு விபரக் கணக்கறிக்கை ஆகியவற்றுடன் இந்நூல் ஆரோக்கிய வாழ்வும் அதற்குரிய மூலிகை மருந்துகளும், எய்ற்ஸ் நோய் தீர எளிய வழி, நலமான வாழ்விற்கு, இலைக்கஞ்சி, உடற் செயற்பாட்டு முறைகளுக்கான மூலிகை விபரங்கள், பழவகைகளும் அவற்றை உண்பதனால் அடையும் பலாபலனும், பதார்த்த குணவிபரம், நோய்களும் மருத்துவ சிகிச்சைகளும், அனுபவமுள்ள குடிநீர்வகைகள், உணவு வகைகளும் பயன்களும், ஏழுவகை உயிர்ச்சத்துகளின் அட்டவணை, விசக்கடி வைத்தியமும் மூலிகை மருத்துவமும் ஆகிய அத்தியாயங்களில் உடல்நல வாழ்வும் மூலிகை மருத்துவமும் உணவு வகைகளும் பற்றி விளக்கக் குறிப்புகள் தொகுக்கப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வை யிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 40263)

ஏனைய பதிவுகள்

14620 நஞ்சுமிழும் காளான்கள்.

பால. சுகுமார். சென்னை 600020: உயிர்மை பதிப்பகம், எண். 5, பரமேஸ்வரி நகர் முதல் தெரு, அடையார், 1வது பதிப்பு, டிசம்பர் 2019. (சென்னை 600077: மணி ஓப்செட்). (8), 9-80 பக்கம், விலை:

12089 – ஸ்ரீ முன்னேஸ்வரம் திருக்கோயில் பண்பாட்டுக் கோலங்கள்.

பா.சிவராமகிருஷ்ண சர்மா. சிலாபம்: ஸ்ரீ சங்கர் வெளியீட்டகம், 144, முன்னேஸ்வரம், 1வது பதிப்பு 2017. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). xviii, 204 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா

14586 என் இதயம் பேசுகிறது.

ஏ.சீ.எம்.இப்றாஹீம். கிண்ணியா 4: பேனா பதிப்பக வெளியீடு, 118, நகரசபை வீதி, 1வது பதிப்பு, 2015. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், இல. 44, புகையிரத நிலைய வீதி). 108 பக்கம், விலை: ரூபா 350., அளவு:

12762 – நானிலம்: கலாசார விழா சிறப்பு மலர் 1997.

மலர் வெளியீட்டுக் குழு. செங்கலடி: கலாசாரப் பேரவை, பிரதேச செயலகம், ஏறாவூர்ப்பற்று, 1வது பதிப்பு, 1997. (மருதமுனை: இளம்பிறை ஓப்செற்). 81 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25 x 18.5 சமீ. ஏறாவூர்பற்று

12585 – கணிதம் ஆண்டு 4.

M.P.M.M.ஷிப்லி, கோ.கோணேசபிள்ளை (தமிழாக்கம்), ந. வாகீசமூர்த்தி, திருமதி ம.திருநாவுக்கரசு (பதிப்பாசிரியர்கள்). கொழும்பு 2: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், கல்வி அமைச்சு, மலாய் வீதி, 1வது பதிப்பு, மே 1984. (கொழும்பு: அரசாங்க அச்சகம்). xi,