12629 – உடல்நல வாழ்வும் மூலிகை மருத்துவமும் உணவு வகைகளும்.

ஆ.சி.முருகுப்பிள்ளை. பருத்தித்துறை: விநாயகர் தரும நிதியம், தெணியம்மன் வீதி, வியாபாரி மூலை, புலோலி மேற்கு, 1 வது பதிப்பு, மார்ச் 1997. (பருத்தித்துறை: விநாயகர் தரும நிதிய அச்சகம், புலோலி மேற்கு).

(16), 150 பக்கம், விலை: ரூபா 39.00, அளவு: 21.5×14 சமீ.

பருத்தித்துறை விநாயகர் தரும நிதியத்தினரின், 16ஆவது மனிதசேவை வெளியீடாக அந்நிறுவனத்தின் தாபகரின் மருத்துவக் குறிப்புகளின் தொகுப்பாக இந்நூல் 21.11.1996 அன்று உருவாக்கப்பட்டு மார்ச் 1997இல் வெளியிடப்பட்டுள்ளது. விநாயகர் தரும நிதிய கணக்கு விபரம், தர்மசாதன விபரம், நூல் வெளியீட்டு விபரக் கணக்கறிக்கை ஆகியவற்றுடன் இந்நூல் ஆரோக்கிய வாழ்வும் அதற்குரிய மூலிகை மருந்துகளும், எய்ற்ஸ் நோய் தீர எளிய வழி, நலமான வாழ்விற்கு, இலைக்கஞ்சி, உடற் செயற்பாட்டு முறைகளுக்கான மூலிகை விபரங்கள், பழவகைகளும் அவற்றை உண்பதனால் அடையும் பலாபலனும், பதார்த்த குணவிபரம், நோய்களும் மருத்துவ சிகிச்சைகளும், அனுபவமுள்ள குடிநீர்வகைகள், உணவு வகைகளும் பயன்களும், ஏழுவகை உயிர்ச்சத்துகளின் அட்டவணை, விசக்கடி வைத்தியமும் மூலிகை மருத்துவமும் ஆகிய அத்தியாயங்களில் உடல்நல வாழ்வும் மூலிகை மருத்துவமும் உணவு வகைகளும் பற்றி விளக்கக் குறிப்புகள் தொகுக்கப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வை யிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 40263)

ஏனைய பதிவுகள்

12906 – நல்லை ஆதீன முதல்வர் நற்சரிதம்.

இராசையா ஸ்ரீதரன் (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனம், நல்லூர், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2004. (அச்சக விபரம் தரப்படவில்லை). (16), 42 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22 x 18

12782 – சுதந்திரம்: தென்னாசிய மொழிபெயர்ப்புக் கவிதைகள்.

கந்தையா ஸ்ரீகணேசன். வவுனியா: வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டம், 1வது பதிப்பு, ஜனவரி 2018. (யாழ்ப்பாணம்: குரு பிரின்டர்ஸ், 39/2, ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி). xxv, 63 பக்கம், விலை: ரூபா 250.,

14495 சிங்கள அலங்காரங்கள்.

உ.நவரத்தினம் (பதிப்பாசிரியர்). மஹரகம: தொலைக் கல்வித் துறை, தேசிய கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 1994. (தெகிவளை: ஏ.ஜே. பிரின்ட்ஸ், இல. 1 B, P.T. டீ சில்வா மாவத்தை). 52 பக்கம், சித்திரங்கள்,