12631 – சுதேச மருத்துவம் பற்றிய இலங்கைத் தமிழ் நூல்கள்:பொருள் மரபும் இலக்கியவளர்ச்சியில்அவற்றின் பங்கும்.

கனகசபாபதி நாகேஸ்வரன் (மூலம்), எஸ். வை.ஸ்ரீதர் (பதிப்பாசிரியர்). கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2013. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

xx, 315 பக்கம், விலை: ரூபா 700., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-374-7.

சித்த வைத்தியர்களுக்கே உரித்தான நூல்களான பரராசசேகரம், செகராசசேகரம் அமுதாகரம் போன்ற நூல்கள் ஆயுர்வேத நூல்களாகும். அஷ்டாங்க இருதயம், மாதவ நிதானம், சரஹசம்கிதை போன்ற நூல்களோடு வரலாற்றுரீதியாக, அடிப்படைரீதியாக, விஞ்ஞான ரீதியாக இலக்கியரீதியாக, இறையியல்ரீதியாக மதிப்பீடு செய்திருப்பது இந்நூலுக்குத் தனிச்சிறப்பைத் தருகின்றது. இலக்கியத்தையும், பக்தி இலக்கியத்தையும், சுதேச மருத்துவத்தையும் பற்றிய தெளிவினை இந்நூலில் பெறமுடிகின்றது. ஆறு இயல்களைக் கொண்ட இந் நூல் ஆரியச் சக்கரவர்த்திகள் காலம் வரையிலான இலங்கைத் தமிழர் வரலாறும் தமிழ் இலக்கிய முயற்சிகளும், பரராசசேகரம் நூலின் அமைப்பும் பொருளடக்கமும், இந்திய மருத்துவ நூலாசிரியர்களும் மருத்துவ நூல்கள் குறித்த சிறு விளக்கமும் – ஈழத்து மருத்துவ நூல்களில் அவற்றின் தாக்கமும், செகராசசேகரம், பரராசசேகரம் ஒப்பீடு, பரராசசேகரத்தின் இலக்கிய நோக்கு, பயில்முறையில் செகராசசேகரம், பரராசசேகரம், அமுதாகரம் ஆகியவை வகிக்கும் முக்கியத்துவம் ஆகிய அத்தியாயத் தலைப்புகளைக் கொண்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 52993).

ஏனைய பதிவுகள்