12633 – ஏட்டு மருத்துவம்(தல்பதே பிலியம் 22ஆம் தொகுப்பு).

ஆயுள்வேத திணைக்களம். கொழும்பு 8: ஆயுள்வேத திணைக்கள வெளியீடு, இல. 325, டாக்டர் எம்.எம். பெரேரா மாவத்தை, 1வது பதிப்பு, மார்ச் 1994. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ்).

(6), 330 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14 சமீ.

நாவின்னை பண்டாரநாயக்க ஞாபகார்த்த ஆயுள்வேத ஆராய்ச்சி நிலையம், கொழும்பு பல்கலைக்கழக சுதேச வைத்திய நிறுவகம் ஆகியவற்றில் தேங்கிக் கிடக்கும் மருத்துவ ஏடுகளைத் தொகுத்து ‘தல்பதேபிலியம்” என்ற தொடரில் நூலுருவில் கொண்டுவரும் முயற்சியில் 21 தொகுப்புகள் சிங்கள மொழியில் நூலுருவாகியுள்ளன. இத்திட்டத்தின் ஒரு படியாக, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சித்த மருத்துவப் பிரிவின் தலைவர் வைத்திய கலாநிதி எஸ்.பவானி அவர்களால் அனுப்பி வைக்கப்பட்ட தமிழ் வைத்திய ஓலைச் சுவடியின் தமிழ் நூல்வடிவம் இது. ஓலைச்சுவடியை வாசித்து உதவியவர் கொழும்பு ஆயுள்வேத போதனா வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவின் தலைவர் வைத்திய கலாநிதி ஏ.ஆர்.எம். தாஹீர் அவர்களாவார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 34131).

ஏனைய பதிவுகள்