12636 – பரராசசேகரம்: பித்தரோக நிதானமும் சிகிச்சையும்.

ஐ.பொன்னையாபிள்ளை. யாழ்ப்பாணம்: மீள்பதிப்புக் குழு, அகஸ்தியர் வைத்தியசாலை ரூ மருந்தகம், 29, மூத்தவிநாயகர் வீதி, நல்லூர், 2வது பதிப்பு, நவம்பர் 1999, 1வது பதிப்பு, 1934. (யாழ்ப்பாணம்: தயா பிரின்டர்ஸ், 138, நாவலர் வீதி).

x, 44 பக்கம், விலை: ரூபா 80.00, அளவு: 20×14 சமீ., ISBN: 955-8379-00-8.

மூலநூல் பதிப்பாசிரியர் ஏழாலை சுதேச வைத்தியர் ஐ.பொன்னையாபிள்ளை அவர்களால் 1934இல் பிரசுரிக்கப்பட்ட சித்தவைத்திய நூலின் மீள்பதிப்பு இது. வைத்தியகலாநிதி சு.நவரத்தினம், க.வே.துரைராசா ஆகியோரின் குறிப்புரைகளுடன் திருத்திய இப்பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது. முதற் பகுதியில் வாயுவிற் பித்தம் தொடங்கி ஓடும் பித்தம் ஈறாக 56 வகையான பித்தங்களைப்பற்றி விளக்கி எழுதப்பட்டுள்ளது. இரண்டாம் பகுதியில் பறங்கியாதி சூரணம் முதல் முசுமுசுக்கை நெய் ஈறாக பல்வேறு சிகிச்சை முறைகள் பற்றி இயல் 62 முதல் 107 வரை விளக்கப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப் பட்டது. சேர்க்கை இலக்கம் 21165).

ஏனைய பதிவுகள்