12642 – கோ பெருஞ்செல்வம்.

திருச்செல்வம் தவரத்தினம். யாழ்ப்பாணம்: தி. தவரத்தினம்,
சர்வசக்தி வெளியீடு, சடையாளி, காரைநகர், 1வது பதிப்பு, டிசம்பர் 2017.
(யாழ்ப்பாணம்: ஆரணன் பதிப்பகம், மருதனார்மடம்).


x, 86 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 20.5×15 சமீ., ISBN: 978-955-38483-1-4.


பசுவின் பெருமைபேசும் இந்நூல், பசுவின் மகிமை, நாட்டு மாடுகளின் சிறப்பு,
அந்நிய நாட்டு கலப்பின மாடுகள், திருமுறைப் பாடல்களில் பசு, பசுத்தானம்,
கோபூசை, பசுவுக்காக வாழ்ந்தோர், வீபூதி, பசுப்பாலின் மகிமை, மாடு பற்றிய
பழமொழிகள், காளை மாடுகள், ஆவுரஞ்சிக் கல், சவாரி மாடுகளின் நல்ல
இலட்சணங்கள், சவாரி மாடுகளுக்குரிய குற்ற அங்க அடையாளங்கள், பசு,
காளைகளுக்குரிய குற்ற அடையாளச் சுழிகள், விதியை மாற்றும் சுழிகளும்
சாஸ்திரங்களும், கண்ணனும் பசுக்களும், மாட்டுத் தொழுவத்தில் இயேசுபிரான்,
காமதேனுப் பசு, மாடுகளிலிருந்து கிடைக்கும் மகத்தான மருந்துகள், மாடுகளுக்கான
மருந்துகள், சூட்சுமமான சூட்டுக்கோல் குறிகள் ஆகிய 22 தலைப்புக்களில்
மாட்டினம் பற்றிய பல்வேறு தகவல்களை இந்நூலில் நூலாசிரியர்
பதிவுசெய்திருக்கிறார். சுழிபுரம் விக்ரோரியா கல்லூரியின் முன்னாள் ஆசிரியரும்
அராலி முருகமூர்த்தி வித்தியாலயத்தின் தற்போதைய அதிபருமான திருச்செல்வம்
தவரத்தினம் அவர்கள் எழுதிய நூல் இது.

ஏனைய பதிவுகள்

14762 குட்டி.

யோ.பெனடிக்ற் பாலன். கொழும்பு 12: எழுத்தாளர் கூட்டுறவுப் பதிப்பகம், 230, மெசஞ்சர் வீதி, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1963. (தமிழ்நாடு: அச்சக விபரம் தரப்படவில்லை). vi, 88 பக்கம், விலை: ரூபா 1.50, அளவு:

14728 ஜீவநதி சிறுகதைகள் தொகுதி 1.

கலாமணி பரணீதரன் (தொகுப்பாசிரியர்). கொழும்பு 10: எஸ்.கொடகே சகோதரர்கள், 675 பி.டி.எஸ்.குலரத்ன மாவத்தை, மருதானை வீதி, 1வது பதிப்பு, 2011. (வெல்லம்பிட்டிய: சத்துர அச்சகம், 69, குமாரதாச பிளேஸ்). 216 பக்கம், விலை: ரூபா

12615 – புதிய க.பொ.த. உயர்தர விலங்கியல் பகுதி IV: ஒப்பீட்டு உடலமைப்பியலும் உடற்றொழிலியலும்: கரப்பான்-தேரை-மனிதன்.

எஸ்.செல்வநாயகம். யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணிய புத்தகசாலை, 235, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, மாசி 1990. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணிய அச்சகம், 63, டீ.யு. தம்பி வீதி). (4), 119 பக்கம், விளக்கப்படங்கள், விலை:

14567 ஆராரோ ஆரிவரோ: மனிதம் விளையும் தாலாட்டு (கவிதைத் தொகுதி).

தென்பொலிகை குமாரதீபன். வல்வெட்டித்துறை: ஆதிரை வெளியீட்டகம், வீரபத்திரர் கோவிலடி, பொலிகண்டி, வல்வெட்டித்துறை, 1வது பதிப்பு, மே 2016. (தொண்டைமானாறு: உயிர்மெய் பதிப்பகம், பிரதான வீதி). xxiv, 70 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 350.,

12951 – நவாலியூர் சோமசுந்தரப் புலவர்.

ஸ்ரீ பிரசாந்தன். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு 2017. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). 60 பக்கம், புகைப்படங்கள், விலை:

13022 அம்பலவாணர் கலையரங்கம்: முதலாம் ஆண்டு நிறைவு மலர் 2018.

கா.குகபாலன் (தொகுப்பாசிரியர்). புங்குடுதீவு: கலைப்பெரு மன்றம்இ 1வது பதிப்புஇ ஏப்ரல் 2018. (யாழ்ப்பாணம்: கரிகணன் (தனியார்) நிறுவனம், 681, காங்கேசன்துறை வீதி).60 பக்கம்இ விலை: குறிப்பிடப்படவில்லைஇ அளவு: 24.5×17 சமீ. புங்குடுதீவில், மிகப்பிரமாண்டமாக அமைக்கப்பட்டு