12642 – கோ பெருஞ்செல்வம்.

திருச்செல்வம் தவரத்தினம். யாழ்ப்பாணம்: தி. தவரத்தினம்,
சர்வசக்தி வெளியீடு, சடையாளி, காரைநகர், 1வது பதிப்பு, டிசம்பர் 2017.
(யாழ்ப்பாணம்: ஆரணன் பதிப்பகம், மருதனார்மடம்).


x, 86 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 20.5×15 சமீ., ISBN: 978-955-38483-1-4.


பசுவின் பெருமைபேசும் இந்நூல், பசுவின் மகிமை, நாட்டு மாடுகளின் சிறப்பு,
அந்நிய நாட்டு கலப்பின மாடுகள், திருமுறைப் பாடல்களில் பசு, பசுத்தானம்,
கோபூசை, பசுவுக்காக வாழ்ந்தோர், வீபூதி, பசுப்பாலின் மகிமை, மாடு பற்றிய
பழமொழிகள், காளை மாடுகள், ஆவுரஞ்சிக் கல், சவாரி மாடுகளின் நல்ல
இலட்சணங்கள், சவாரி மாடுகளுக்குரிய குற்ற அங்க அடையாளங்கள், பசு,
காளைகளுக்குரிய குற்ற அடையாளச் சுழிகள், விதியை மாற்றும் சுழிகளும்
சாஸ்திரங்களும், கண்ணனும் பசுக்களும், மாட்டுத் தொழுவத்தில் இயேசுபிரான்,
காமதேனுப் பசு, மாடுகளிலிருந்து கிடைக்கும் மகத்தான மருந்துகள், மாடுகளுக்கான
மருந்துகள், சூட்சுமமான சூட்டுக்கோல் குறிகள் ஆகிய 22 தலைப்புக்களில்
மாட்டினம் பற்றிய பல்வேறு தகவல்களை இந்நூலில் நூலாசிரியர்
பதிவுசெய்திருக்கிறார். சுழிபுரம் விக்ரோரியா கல்லூரியின் முன்னாள் ஆசிரியரும்
அராலி முருகமூர்த்தி வித்தியாலயத்தின் தற்போதைய அதிபருமான திருச்செல்வம்
தவரத்தினம் அவர்கள் எழுதிய நூல் இது.

ஏனைய பதிவுகள்