மா.செல்வராஜா. மகரகம: மா.செல்வராஜா, கல்வி முகாமைத்துவ அபிவிருத்தித்துறை, தேசிய கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 1996. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், 1,B.T.P.DeSilva Mawatha).
163 பக்கம், விலை: ரூபா 120., அளவு: 21.5×14 சமீ., ISBN: 955-95598-4-2.
பல முகாமைத்துவ ஆராய்ச்சியாளர்களின் கருத்துக்களை இவ்வெளியீட்டின் மூலம் நூலாசிரியர் வெளிக்கொணர்ந்துள்ளார். முகாமைத்துவக் கருத்துக்கள் காலப்பரிமாணப் படிமுறையில் தொகுத்துத் தரப்பட்டுள்ளமை இந்நூலின் தனிச்சிறப்பாகும். இதில் முகாமைத்துவச் சிந்தனையாளர்களது கருத்துக்கள் தரப்பட்டுள்ளதுடன் முகாமைத்துவச் செயற்பாடுகள் தொடர்பான ஓர் ஆரம்பஅறிவும் கொடுக்கப்பட்டுள்ளது. முடியுமான அளவில் இலகுவான மொழியில் தரப்படுவதால் விளங்குவதற்கு இலகுவாக உள்ளது. இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ள இந்நூலின் முகாமைத்துவச் சிந்தனைகள் என்ற முதற் பகுதியில், அறிமுகம், பிரடெரிக் டபிள்யு. ரெயிலர், ஹென்றி பயோல், எல்ரன் மாயோ, மேரி பொலெற், டக்ளஸ் மக்றேகர், பிரடெரிக் ஹேஸ்பேர்க், ஏபிரகாம் மாஸ்லோ, பீற்றர் றக்கர், தியோடோர் லெவிற் ஆகியோரது கருத்துக்கள் தரப்பட்டுள்ளன. முகாமைத்துவச் செயற்பாடுகள் என்ற இரண்டாம் பகுதியில், அறிமுகம், முகாமைத்துவச் சிந்தனைப் பிரிவுகளும் அணுகுமுறைகளும், முகாமைத்துவத் தொழிற்பாடுகள், திட்டமிடல், ஒழுங்கமைத்தல், கட்டுப்படுத்தல், தீர்மானம் செய்தல், தொடர்பாடல், குறிக்கோள் சார்ந்த முகாமைத்துவம் ஆகிய முகாமைத் துவச் செயற்பாடுகள் விபரிக்கப்பட்டுள்ளன. நூலின் இறுதியில் துணை நூற் பட்டியலும், கலைச் சொற் பட்டியலும் தரப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 33309. நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தின் சேர்க்கை இலக்கம் 007219).