க.ரகுராகவன், இரா.பத்மரஞ்சன். மட்டக்களப்பு: யுனைட்டட் வெளியீடு, மட்டக்களப்பு மாவட்ட லயன்ஸ் கழகத்தின் சமூக அபிவிருத்தி நிதிக்கான வெளியீடு, 1வது பதிப்பு, டிசம்பர் 1997. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
(6), 173 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 19×13 சமீ., ISBN: 955-645-000-9.
நிகழ்கால நிறைவேற்றுநர்களுக்கான உற்பத்தித்திறன் அதிகரிப்பிற்கான பதினைந்து செயல்முறைத் தந்திரோபாயங்களின் சுருக்கமே இந்நூலின் உள்ளடக்கமாகும். நூலாசிரியர்கள் நிறுவன உற்பத்தித் திறனை அதிகரிக்கும் வகையில் எவ்வாறான நடத்தையியல் மற்றும் பிரயோக உபாயங்களை முகாமையாளர்கள் கையாளமுடியும் என்பதைக் கோட்பாடுகளின் துணைகொண்டு விளக்கியுள்ளனர். இவை முகாமையாளர்களின் சிந்தனைக்கு விருந்தாக அமைவதுடன் அவர்கள் மனித வளத்தை சிறப்பாகக் கையாள உதவுவதாகவும் அமைகின்றது. நூலாசிரியர் க. ரகுராகவன் கிழக்குப் பல்கலைக்கழக வணிக முகாமைத்துவபீட பீடாதிபதியாவார். இரா.பத்மரஞ்சன், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வணிக முகாமைத்துவ பீடத்தின் விரிவுரையாளர்களுள் ஒருவராவார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 23236)