12660 – இலங்கை மத்திய வங்கி: ஆண்டறிக்கை 1971.

இலங்கை மத்திய வங்கி. கொழும்பு 1: நாணயச் சபை, இலங்கை மத்திய வங்கி, தபால் பெட்டி இலக்கம் 590, 1வது பதிப்பு, மார்ச் 1972. (கொழும்பு 12: குமரன் பதிப்பகம், 201, டாம் வீதி).

viii, 281,clxxxvi+xv பக்கம், 23 வரைபடங்கள், 65 அட்டவணைகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 27×17 சமீ.

நாணய விதிச் சட்டத்தின் (422ஆம் அத்தியாயம்) 35(1)ஆம் பிரிவின் ஏற்பாடு களுக்கிணங்க வெளியிடப்பட்டுள்ள இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையினது 22ஆவது ஆண்டறிக்கை இது. இவ்வறிக்கை நான்கு பகுதிகளாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. முதலாவது பகுதியில், 1971ஆம் ஆண்டுக்குரிய பொருளாதாரச் செயலாற்றல், பிரச்சினைகள் கொள்கைகள் என்பன அறிக்கையிடப்பட்டுள்ளன. 2ஆவது பகுதியில், 1971ம் ஆண்டுக்குரிய தேசிய உற்பத்தியும் செலவும், கைத்தொழில் உற்பத்தி, அரசாங்கத் தொழில் முயற்சிகள், பணம், வங்கித் தொழில் ஆகியவற்றின் அபிவிருத்திகள், கிராமிய வங்கித் தொழிலும் கொடுகடனும், அரசாங்க நிதி, சென்மதி நிலுவைகளும் வெளிநாட்டு இருப்புச் சொத்துக்களும், விலைகளும் கூலிகளும், வேலை நிலையும் தொழிலஉறவுகளும், வெளிநாட்டு வர்த்தகம் என்பனவற்றின் பொருளாதார நிதிப் போக்குகள் என்பன அறிக்கையிடப்பட்டுள்ளன. மூன்றாவது பகுதியில், மத்திய வங்கியின் கணக்குகளும் செயற்பாடுகளும், நான்காவது பகுதியில், அலுவலகப் பணியாளர்கள் பற்றியும் அறிக்கையிடப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 4553).

ஏனைய பதிவுகள்

Better Free Revolves Casinos

Posts Foxy Casino No deposit Extra On the Foxy Gambling establishment Sign up Give Foxy Ports Games Foxy Bingo Purchase Strategy Ideas on how to