12661 – இலங்கை மத்திய வங்கி: ஆண்டறிக்கை 1972.

இலங்கை மத்திய வங்கி. கொழும்பு 1: நாணயச் சபை, இலங்கை மத்திய வங்கி, தபால் பெட்டி இலக்கம் 590, 1வது பதிப்பு, மார்ச் 1973. (கொழும்பு 12: குமரன் பதிப்பகம், 201, டாம் வீதி).

xii, 304, cclxv+xxii பக்கம், 23 வரைபடங்கள், 65 அட்டவணைகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×16 சமீ.

நாணய விதிச் சட்டத்தின் (422ஆம் அத்தியாயம்) 35(1)ஆம் பிரிவின் ஏற்பாடுகளுக்கிணங்க வெளியிடப்பட்டுள்ள இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையினது 23ஆவது ஆண்டறிக்கை இது. நான்கு பிரிவுகளாயமைந்துள்ள இவ்வறிக்கையின் முதற் பிரிவில் 1972ஆம் ஆண்டுக்கான பொருளாதாரச் செயலாற்றம், மற்றும் சிக்கல்களும் கொள்கைகளும் விளக்கப்பட்டுள்ளன. பொருளாதார நிதிப் போக்குகள் என்ற பிரிவில் தேசிய உற்பத்தியும் செலவினமும், கைத்தொழில் உற்பத்தி, அரசாங்கத் தொழில் முயற்சிகள், பணம், வங்கித் தொழில், ஆகியவற்றின் அபிவிருத்திகள், கிராமிய வங்கித் தொழிலும் கொடுகடனும், நடைமுறை மாதிரி அளவைகள், அரசாங்க நிதி, சென்மதி நிலுவையும் வெளிநாட்டுச் சொத்துக்களும், விலைகளும் கூலிகளும், தொழில்நிலையும் தொழில் உறவுகளும், வெளிநாட்டு வர்த்தகம் ஆகிய விடயங்கள் அறிக்கையிடப்பட்டுள்ளன. 3ம் பிரிவில் மத்திய வங்கிக் கணக்குகளும் தொழிற்பாடுகளும், 4ஆம் பிரிவில் ஆளணி வளங்களும் அறிக்கையிடப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 4554)

ஏனைய பதிவுகள்

12266 – இரண்டாம் குடியரசு அரசியலமைப்பு.

ரு.வு.தமீம். கொழும்பு 13: ரு.வு.தமீம், ராஜேஸ்வரி நிறுவனம், 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (அச்சக விபரம் தரப்படவில்லை). 35 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ. ஒவ்வொரு நாட்டிற்கும் அரசியல் திட்டம்

14637 பிரமிள்: தேர்ந்தெடுத்த கவிதைகள்.

பிரமிள் (மூலம்), சுகுமாரன் (தொகுப்பாசிரியர்). நாகர்கோவில் 629001: காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.சாலை, 2வது பதிப்பு, டிசம்பர் 2017, 1வது பதிப்பு, மே 2016. (சென்னை 600077: மணி ஓப்செட்). 127 பக்கம், விலை:

Solltest du Dump seinen Arsch?

Er sitzt auf seinem Hintern. Er spielt ein mittelmäßiges Videospiel für 2 Stunden richtig. Er wählt ihr Gehörgang. Der Typ raucht aus ihrer Bong. Dann

14177 ஸ்ரீ ராமகிருஷ்ண சாரதா சமித்தி: வெள்ளிவிழா மலர் 1995.

மலர்க் குழு. கொழும்பு 6: ஸ்ரீ ராமகிருஷ்ண சாரதா குடீர், 59, விவேகானந்தா வீதி, 1வது பதிப்பு, 1995. (கொழும்பு: செவ்வந்தி அச்சகம்). (72) பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 27×20

14617 துளிர் விடும் அரும்பு: கவிதைகள்.

வேலணையூர் என்.கண்ணதாஸ். வேலணை: கலை இலக்கிய வட்டம், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2015. (யாழ்ப்பாணம்: குரு பிரிண்டர்ஸ், 39/2, ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி). xii, 51 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 20×14.5

12132 – காளி ஆச்சி.

வே.வரதசுந்தரம். கொழும்பு 6: சிவகாமி அம்மாள் பப்ளிக்கேஷன்ஸ், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, மார்ச் 1999. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48டீ, புளுமெண்டால் வீதி). xx, 92 பக்கம், புகைப்படங்கள், விலை: