இலங்கை மத்திய வங்கி. கொழும்பு 1: நாணயச் சபை, இலங்கை மத்திய வங்கி, தபால் பெட்டி இலக்கம் 590, 1வது பதிப்பு, மார்ச் 1973. (கொழும்பு 12: குமரன் பதிப்பகம், 201, டாம் வீதி).
xii, 304, cclxv+xxii பக்கம், 23 வரைபடங்கள், 65 அட்டவணைகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×16 சமீ.
நாணய விதிச் சட்டத்தின் (422ஆம் அத்தியாயம்) 35(1)ஆம் பிரிவின் ஏற்பாடுகளுக்கிணங்க வெளியிடப்பட்டுள்ள இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையினது 23ஆவது ஆண்டறிக்கை இது. நான்கு பிரிவுகளாயமைந்துள்ள இவ்வறிக்கையின் முதற் பிரிவில் 1972ஆம் ஆண்டுக்கான பொருளாதாரச் செயலாற்றம், மற்றும் சிக்கல்களும் கொள்கைகளும் விளக்கப்பட்டுள்ளன. பொருளாதார நிதிப் போக்குகள் என்ற பிரிவில் தேசிய உற்பத்தியும் செலவினமும், கைத்தொழில் உற்பத்தி, அரசாங்கத் தொழில் முயற்சிகள், பணம், வங்கித் தொழில், ஆகியவற்றின் அபிவிருத்திகள், கிராமிய வங்கித் தொழிலும் கொடுகடனும், நடைமுறை மாதிரி அளவைகள், அரசாங்க நிதி, சென்மதி நிலுவையும் வெளிநாட்டுச் சொத்துக்களும், விலைகளும் கூலிகளும், தொழில்நிலையும் தொழில் உறவுகளும், வெளிநாட்டு வர்த்தகம் ஆகிய விடயங்கள் அறிக்கையிடப்பட்டுள்ளன. 3ம் பிரிவில் மத்திய வங்கிக் கணக்குகளும் தொழிற்பாடுகளும், 4ஆம் பிரிவில் ஆளணி வளங்களும் அறிக்கையிடப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 4554)