12665 – இலங்கை மத்திய வங்கி: ஆண்டறிக்கை 1983.

இலங்கை மத்திய வங்கி. கொழும்பு 1: நாணயச் சபை, இலங்கை மத்திய வங்கி, சனாதிபதி மாவத்தை, 1வது பதிப்பு, 1984. (கொழும்பு: குமரன் அச்சகம், 201, டாம் வீதி).

(12), 198 பக்கம், ஒxxxvii, xvii, xxvi, 46 அட்டவணைகள், விலை: ரூபா 15.00, அளவு: 24×17 சமீ.

இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka), இலங்கையின் நாணயக் கொள்கை, நிதியியல் முறைமையினை கட்டுப்படுத்தல், நெறிப்படுத்தல், நாணயங்களை அச்சிடல் போன்ற பணிகளை மேற்கொள்வதற்காக அமைக்கப்பட்ட அரச நிறுவனமாகும். இது இலங்கையின் நாணய மேலாண்மைச் சபையாக விளங்குகின்றது. இலங்கை விடுதலை பெற்று இரு ஆண்டுகளுக்குப் பின்னர் ஊநவெசயட டீயமெ ழக ஊநலடழn எனும் பெயருடன் 1950 ம் ஆண்டு ஆகஸ்டு 28ம் திகதி நிறுவப்பட்டது. பின்னர் 1985 ல் தற்போதைய பெயருக்கு மாற்றம் செய்யப்பட்டது. அதுவரை நாட்டின் நாணய வழங்கலுக்குப் பொறுப்பாக இருந்த பணச் சபைக்குப் பதிலாக இலங்கை மத்திய வங்கி ஏற்படுத்தப்பட்டது. இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை மாண்புமிகு நிதி திட்டமிடல் அமைச்சருக்கு ஒப்படைத்த 1983ஆம் ஆண்டுக்கான ஆண்டறிக்கை இதுவாகும். 4 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ள இவ்வறிக்கையின் 1ம் பகுதியில் 1983ஆம் ஆண்டுக்குரிய பொருளாதாரச் செயலாற்றமும், பிரச்சினைகளும், கொள்கைகளும் அறிக்கையிடப்பட்டுள்ளன. இரண்டாம் பகுதியில் மத்திய வங்கியின் கணக்குகளும் தொழிற்பாடுகளும், 3ம் பகுதியில் முதன்மையான நிர்வாக விதிமுறைகளும், இறுதிப் பகுதியான 4வது பகுதியில் முதன்மைச் சட்டவாக்கங்களும் அறிக்கையிடப்பட்டுள்ளன. (இந் நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 31103).

ஏனைய பதிவுகள்

Best 100 Real cash Online casinos

Content How to win in bingo | A huge Directory of Internet casino Ports You could potentially Wager Enjoyable Totally free Game Put And you

13809 ஜமேலா.

ஜி.நேசன். (இயற்பெயர்: ஜி.நேசமணி). கொழும்பு 14: ஜனமித்திரன் வெளியீடு, எகஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ்  லிமிட்டெட், 185, கிராண்ட்பாஸ் வீதி, 1வது பதிப்பு, 1975. (கொழும்பு 14: ஜனமித்திரன் வெளியீடு, எகஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ்  லிமிட்டெட், 185, கிராண்ட்பாஸ்

16035 நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்.

ஓட்டமாவடி அறபாத். நாகர்கோவில் 629001: காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.சாலை, 1வது பதிப்பு, டிசம்பர் 2017. (சென்னை 600077: மணி ஓப்செட் பிரின்டர்ஸ்). 160 பக்கம், விலை: இந்திய ரூபா 180., அளவு: 21.5×14