12666 – இலங்கை மத்திய வங்கி: ஆண்டறிக்கை 1985.

இலங்கை மத்திய வங்கி. கொழும்பு 1: நாணயச் சபை, இலங்கை மத்திய வங்கி, இல. 30, சனாதிபதி மாவத்தை, 1வது பதிப்பு, 1986. (கொழும்பு 14: ஸ்டார்லைன் அச்சகம், இல. 213, கிரான்ட்பாஸ் வீதி).

(12), 161, lxxxx பக்கம், 35 அட்டவணைகள், விலை: ரூபா 20., அளவு: 24.5×18 சமீ.

நாணய விதிச் சட்டத்தின் (422ஆம் அத்தியாயம்) 35(1)ஆம் பிரிவின் ஏற்பாடுகளுக்கிணங்க வெளியிடப்பட்டுள்ள இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையினது 36ஆவது ஆண்டறிக்கை இது. இதில் பொருளாதாரச் செயலாற்றம் 1985, மொத்த தேசிய உற்பத்தி, வருமானம், செலவு, வேளாண்மை, கைத்தொழில், பொருளாதார சமூக நலன்புரிச் செலவுகள், விலைகள், கூலிகள், தொழில்நிலை, வர்த்தகமும் சுற்றுலாவும், சென்மதி நிலுவை, அரச நிதி, பணமும் வங்கித் தொழிலும், ஆகிய விடயங்கள் சார்ந்த அறிக்கை முதலாம் பிரிவிலும், மத்திய வங்கியின் கணக்குகளும் தொழிற்பாடுகளும் இரண்டாம் பிரிவிலும், முக்கிய நிர்வாக வழிமுறைகள் மூன்றாவது பிரிவிலும், முதன்மைச் சட்டவாக்கங்கள் நான்காவது பிரிவிலும் புள்ளிவிபரப் பின்னிணைப்புகள் இறுதியாகவும் இடம் பெற்றுள்ளன.(இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 4561).

ஏனைய பதிவுகள்

11385 மட்டக்களப்பு வசந்தன் கவித்திரட்டு.

தி.சதாசிவ ஐயர் (தொகுத்துப் பரிசோதித்தவர்). மட்டக்களப்பு: D.E.கணபதிப்பிள்ளை, தலைவர், மட்டக்களப்பு தெற்கு தமிழ் ஆசிரியர் சங்கம், 1வது பதிப்பு, 1940. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்). xlvi, 111 பக்கம், வரைபடங்கள், விலை: ரூபா 1.00,