12667 – இலங்கை மத்திய வங்கி: ஆண்டறிக்கை 1990.

இலங்கை மத்திய வங்கி. கொழும்பு 1: நாணயச் சபை, இலங்கை மத்திய வங்கி, இல. 30, சனாதிபதி மாவத்தை, 1வது பதிப்பு, 1986. (கொழும்பு 14: ஸ்டார்லைன் அச்சகம், இல. 213, கிரான்ட்பாஸ் வீதி).

(12), 161, lxxxx பக்கம், 35 அட்டவணைகள், விலை: ரூபா 50., அளவு: 24.5×18 சமீ.

நாணய விதிச் சட்டத்தின் (422ஆம் அத்தியாயம்) 35(1)ஆம் பிரிவின் ஏற்பாடுகளுக்கிணங்க வெளியிடப்பட்டுள்ள இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையினது 41ஆவது ஆண்டறிக்கை இது. இவ்வறிக்கையின் முதலாம் பகுதியில் 1990இல் பொருளாதாரச் செயலாற்றம், பிரச்சினைகளும் கொள்கைகளும், தேசிய வருமானமும் செலவும், வேளாண்மை, ஏனைய வேளாண்மை உற்பத்திகள், கைத்தொழில், பொருளாதார சமூக நலன்புரிச் செலவுகள், விலைகள், கூலிகள், தொழில்நிலை, வர்த்தகமும் சுற்றுலாவும், சென்மதி நிலுவை, அரச நிதி, பணமும் வங்கித் தொழிலும், தேசிய உற்பத்தியும் செலவும் ஆகிய தலைப்புகளில் அறிக்கையிடப்பட்டுள்ளது. 2ம் பகுதியில் மத்திய வங்கிக் கணக்குகளும் தொழிற்பாடுகளும், 3வது பகுதியில் முக்கிய நிர்வாக வழிமுறைகள், 4ம் பகுதியில் முதன்மைச் சட்டவாக்கங்கள் ஆகியன அறிக்கையிடப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 10990)

ஏனைய பதிவுகள்

12796 – ஒரு பெண்ணின் கதை: சிறுகதைத் தொகுதி.

எம்.எஸ்.அமானுல்லா. மூதூர் 5: எம்.எஸ்.அமானுல்லா, 162, அரபுக் கல்லூரி வீதி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2017. (மூதூர்: எஸ்.எச். பிரின்டர்ஸ்). 101 பக்கம், விலை: ரூபா 270., அளவு: 21.5 x 14.5 சமீ.,

14631 பகலில் காணும் கனவுகள்: கவிதைத் தொகுப்பு-01.

வட வரணி சி.சபா. கொடிகாமம்: நதியோர நாணல்கள்- கலை இலக்கிய மன்றம், நாவற்காடு, வரணி, 1வது பதிப்பு, 2018. (யாழ்ப்பாணம்: சிவகஜன் பதிப்பகம்). (4), 76 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ.

14110 இடைக்காடு அருள்மிகு ஸ்ரீ புவனேஸ்வரி அம்பாள் ஆலய மஹாகும்பாபிஷேக சிறப்பு மலர் 22.04.2005.

மலர்க்குழு. இடைக்காடு: ஆலய பரிபாலன சபை, அருள்மிகு ஸ்ரீ புவனேஸ்வரி அம்பாள் ஆலயம், 1வது பதிப்பு, ஏப்ரல் 2005. (கொழும்பு 13: லக்ஷ்மி அச்சகம், 195, ஆட்டுப்பட்டித் தெரு). (6), viii, 84 பக்கம்,

12842 – தேம்பாவணி இரட்சணிய யாத்திரிகம் இயேசு புராணமாதிய மூன்று கிறித்தவ இலக்கிய நூல்களின் நூல் ஆராய்வு.

ஈழத்துப் பூராடனார் (இயற்பெயர்: க.தா. செல்வராஜகோபால்). கனடா: சீவன் பதிப்பகம், இல. 3, 1292 Sherwood Mills Blvd,Mississauga L5V1S6, Ontario,1வது பதிப்பு, 2009. (கனடா: ரீ கொப்பி, டொரன்டோ). xxxviஇ 312 பக்கம்,

12346 – இளங்கதிர்:இதழ் 1 மலர் 6 (1953-1954).

சி.வெங்கடேச சர்மா (இதழாசிரியர்). பேராதனை: தமிழ்ச்சங்கம், இலங்கைப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 1954. (கண்டி: அருணா பிரஸ், இல. 42, ஹில் ஸ்ட்ரீட்). 370.05 கல்விநிறுவனங்களின் ஆய்விதழ்கள், ஆண்டு மலர்கள்190 நூல் தேட்டம் –