12668 – இலங்கை மத்திய வங்கி: ஆண்டறிக்கை 1998.

இலங்கை மத்திய வங்கி. கொழும்பு 1: நாணயச் சபை, இலங்கை மத்திய வங்கி, 35ஆவது மாடி, மேற்குக் கோபுரம், உலக வர்த்தக நிலையம், எக்சலன் சதுக்கம், இலங்கை வங்கி மாவத்தை, 1வது பதிப்பு, ஏப்ரல் 1999. (கொழும்பு 12: ஜே அன்ட் எஸ். சேர்விஸஸ் அச்சகம், 115 மெசெஞ்சர் வீதி).

(30), 287 பக்கம், lxi, liii, x, 122 அட்டவணைகள், விலை: ரூபா 100.00, அளவு: 27×20 சமீ., ISBN: 955-575-057-2.

நாணய விதிச் சட்டத்தின் (அத்தியாயம் 422) 35ஆம் பிரிவானது பொருளாதார நிலைமை, மத்திய வங்கியின் நிலைமை மற்றும் நாணயச் சபையினால் மேற்கொள்ளப்பட்ட கொள்கைகள், வழிமுறைகள் என்பன பற்றிய ஆய்வு மீதான ஆண்டறிக்கையை ஒவ்வொரு நிதியாண்டும் முடிவடைந்து நான்கு மாதங்களுக்குள் மத்திய வங்கியின் நாணயச்சபை நிதி திட்டமிடல் அமைச்சுக்கு அனுப்பிவைக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றது. அவ்வகையில் 49ஆவது ஆண்டறிக்கை யாகத் தயாரிக்கப்பட்ட 1998ம் ஆண்டுக்கான ஆண்டறிக்கை இதுவாகும். 4 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ள இவ்வறிக்கையின் 1ம் பகுதியில் பொருளாதாரச் செயலாற்றல் பிரச்சினைகளும் கொள்கைகளும், தேசிய வருமானமும் செலவும், வேளாண்மை, மீன்பிடி, காடாக்கல், கைத்தொழில், பொருளாதார சமூக நலன்புரிச் செலவுகள், விலைகளும் கூலிகளும், குடித்தொகை, தொழிற்படை மற்றும் தொழில்நிலை, அரசிறைக் கொள்கையும் வரவு செலவுத் திட்ட தொழிற்பாடுகளும், வர்த்தகம் சென்மதி நிலுவைகள் மற்றும் சுற்றுலா, நிதியியற்துறை ஆகிய பத்து பிரிவுகள் அறிக்கையிடப்பட்டுள்ளன. 2வது பகுதியில் மத்திய வங்கியின் கணக்குகளும் தொழிற்பாடுகளும், பகுதி 3இல் 1998இல் நாணயச் சபையால் மேற்கொள்ளப்பட்ட முக்கிய நிர்வாக வழிமுறைகளும், 4வது பகுதியில் மத்திய வங்கியினதும் இலங்கையில் உள்ள வங்கித் தொழில் நிறுவனங்களினதும் கடமைகளும் தொழிற்பாடுகளும் தொடர்பான 1998ஆம் ஆண்டின் முதன்மைச் சட்டங்களும் அறிக்கையிடப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 18770).

ஏனைய பதிவுகள்

Exacta Package Wager

Content New jersey Pony Race Mind In which Can i Watch 100 percent free Live Pony Rushing In the U S? Jockeys have the effect