இலங்கை மத்திய வங்கி. கொழும்பு 1: நாணயச் சபை, இலங்கை மத்திய வங்கி, 35ஆவது மாடி, மேற்குக் கோபுரம், உலக வர்த்தக நிலையம், எக்சலன் சதுக்கம், இலங்கை வங்கி மாவத்தை, 1வது பதிப்பு, ஏப்ரல் 2000. (கொழும்பு 12: ஜே அன்ட் எஸ். சேர்விஸஸ் அச்சகம், 115 மெசெஞ்சர் வீதி).
(28), 304 பக்கம், lxix, lxxx, l, 124 அட்டவணைகள், விலை: ரூபா 100.00, அளவு: 28×20.5 சமீ., ISBN: 955-575-070-x.
நாணய விதிச் சட்டத்தின் (422ஆம் அத்தியாயம்) 35(1)ஆம் பிரிவின் ஏற்பாடுகளுக்கிணங்க வெளியிடப்பட்டுள்ள இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையினது 50ஆவது ஆண்டறிக்கை இது. நான்கு பிரிவகளைக்கொண்ட இவ்வறிக்கையின் முதலாவது பிரிவில் பொருளாதாரச் செயலாற்றம், கொள்கைகளும் விடயங்களும், தேசிய வருமானமும் செலவும், வேளாண்மை, கடற்றொழில் மற்றும் காடாக்கல், கைத்தொழில், பொருளாதார மற்றும் சமூக நலன்புரிச் செலவுகள், விலைகளும் கூலிகளும், குடித்தொகை, தொழிற்படை மற்றும் தொழில்நிலை, இறைக் கொள்கையும் வரவுசெலவுத் திட்டத் தொழிற்பாடுகளும், வர்த்தகம், சென்மதி நிலுவை மற்றும் சுற்றுலா, நிதியியல்துறை, ஆகிய உபதலைப்புகளின் கீழும், இரண்டாவது பிரிவில் மத்திய வங்கியின் கணக்குகளும் தொழிற்பாடுகளும் என்ற தலைப்பின் கீழும், மூன்றாவது பிரிவில் 1999இல் நாணயச் சபையினால் மேற்கொள்ளப்பட்ட முக்கிய நிர்வாக வழிமுறைகள் என்ற தலைப்பின்கீழும் அறிக்கையிடப்பட்டுள்ளது. இறுதிப் பிரிவில் மத்திய வங்கியினதும் இலங்கையிலுள்ள வங்கித் தொழில் நிறுவனங்களினதும் கடமை களும் தொழிற்பாடுகளும் தொடர்பான 1999ஆம் ஆண்டின் முதன்மைச் சட்ட வாக்கங்கள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 18771).