12670 – இலங்கை மத்திய வங்கி: ஆண்டறிக்கை 2000.

இலங்கை மத்திய வங்கி. கொழும்பு 1: நாணயச் சபை, இலங்கை மத்திய வங்கி, இல. 30, சனாதிபதி மாவத்தை, 1வது பதிப்பு, 2001. (கொழும்பு 12: ஜே.அன். எஸ் சேர்விசஸ் அச்சகம், இல. 115, மெசெஞ்சர் வீதி).

பகுதி 1: (14), 343 பக்கம், பகுதி 2: டஒஒii, பகுதி 3: (4), ஒடiஒ பக்கம், பகுதி 4: (28) பக்கம், வரைபடங்கள், அட்டவணைகள், விலை: ரூபா 150., அளவு: 27ஒ20.5 சமீ., ஐளுடீN: 955-575-076-9. 51

ஆவது ஆண்டாகத் தயாரிக்கப்பட்டுள்ள 2000ம் ஆண்டுக்கான மத்திய வங்கியின் ஆண்டறிக்கை இதுவாகும். 4 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ள இவ்வறிக்கையின் முதலாவது பிரிவில் பொருளாதாரச் செயலாற்றல் தோற்றப்பாடு, கொள்கைகள் மற்றும் விடயங்கள், தேசிய வருமானமும் செலவும், வேளாண்மை, மீன்பிடித் தொழில் மற்றும் காடாக்கல், கைத்தொழில், பொருளாதார மற்றும் சமூக நலன்புரிசசெலவுகள், விலைகளும் கூலிகளும், குடித்தொகை தொழிற்படை மற்றும் தொழில் நிலை, இறைக் கொள்கையும் வரவுசெலவுத் திட்டத் தொழிற்பாடும், வர்த்தகம், சென்மதி நிலுவை மற்றும் சுற்றுலா, நிதியியல்துறை ஆகிய விடயங்கள் அறிக்கையிடப்பட்டுள்ளன. இரண்டாவது பிரிவில் மத்திய வங்கியின் கணக்குகளும் தொழிற்பாடுகளும், மூன்றாவது பிரிவில் 2000-இல் நாணயச் சபையினால் மேற்கொள்ளப்பட்ட முக்கிய நிர்வாக வழிமுறைகளும், இறுதிப் பிரிவில் மத்திய வங்கியினதும் இலங்கையிலுள்ள வங்கித் தொழில் நிறுவனங்களினதும் கடமைகளும் தொழிற்பாடுகளும் தொடர்பான 2000-ஆம் ஆண்டின் முதன்மைச் சட்டவாக்கங்களும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 20847).

ஏனைய பதிவுகள்

16878 லண்டன் தமிழர் தகவல்: ஆறு திருமுருகனின் 50ஆவது அகவை பொன்விழா மலர்.

குலமணி (ஆசிரியர்), நா.சிவானந்தசோதி (பதிப்பாசிரியர்). கென்ட், பிரித்தானியா: நா.சிவானந்தசோதி, திருமுருகன் அறிவகம், 41, Haddington Road, Bromley,Kent BR1 5RG, 1வது பதிப்பு, மே 2011. (லண்டன்: அச்சக விபரம் தரப்படவில்லை). 72 பக்கம்,