12671 – இலங்கை மத்திய வங்கி: ஆண்டறிக்கை 2001.

இலங்கை மத்திய வங்கி. கொழும்பு 1: நாணயச் சபை, இலங்கை மத்திய வங்கி, இல.30, சனாதிபதி மாவத்தை, 1வது பதிப்பு, ஏப்ரல் 2002. (கொழும்பு 12: ஜே அன்ட் எஸ். சேர்விஸஸ் அச்சகம், 115 மெசெஞ்சர் வீதி).

(28), 371 பக்கம், xciii, lxxxviii, xvii, 129 அட்டவணைகள், விலை: ரூபா 200.00, அளவு: 28×20 சமீ., ISBN: 955-575-098-1.

இவ்வறிக்கையில் பொருளாதாரச் செயலாற்றல், தோற்றப்பாடு மற்றும் விடயங்களும் கொள்கைகளும், தேசிய வருமானமும் செலவினமும், வேளாண்மை மீன்பிடி மற்றும் காடாக்கல், கைத்தொழில், பொருளாதார மற்றும் சமூக நலன்புரிச் செலவுகள், விலைகளும் கூலிகளும், குடித்தொகை, தொழிற்படை மற்றும் தொழில்நிலை, இறைக் கொள்கையும் வரவு செலவுத்திட்ட தொழிற்பாடுகளும், வர்த்தகம் சென்மதி நிலுவை மற்றும் சுற்றுலா, நிதியியல்துறை ஆகிய 10 தலைப்புகளின் கீழ் இலங்கையின் 2001ஆம் ஆண்டுக்கான பொருளாதாரப் போக்குகள் அறிக்கையிடப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 23104).

ஏனைய பதிவுகள்

12225 – பல்லின சமூகத்தில் சனநாயகம்.

டொனால்ட் எல்.ஹரோவிட்ஸ் (ஆங்கில மூலம்), மா.கருணாநிதி (தமிழாக்கம்), எஸ்.அன்ரனி நோபேட் (பதிப்பாசிரியர்). கொழும்பு 5: மார்கா நிறுவனம், தபால்பெட்டி எண். 601, இல.61, இசிப்பத்தான மாவத்தை, 1வது பதிப்பு, 1995. (கொழும்பு 13: யுனி

14861 கொங்கு வேளீர் இயற்றிய கொங்குவேண் மாக்கதை எனும் பெருங்கதை: ஆய்வு நோக்கு.

க.தா.செல்வராஜகோபால் (புனைபெயர்: ஈழத்துப் பூராடனார்). கனடா: சீவன் பதிப்பகம், இல. 3, 1292 Sherwood Mills Blvd, Mississauga L5V1S6, Ontario, 1வது பதிப்பு, 2008. (கனடா: ரீ கொப்பி, டொரன்டோ). 280+56 பக்கம்,

12524 – சைவத் தமிழ் திருமணங்கள்: ஓர் கையேடு.

இ.குமாரவடிவேல் (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: குருபரன்-ஆரணி திருமணநாள் ஞாபகார்த்த வெளியீடு, 1வது பதிப்பு, பெப்ரவரி 2014. (யாழ்ப்பாணம்: கரிகணன் தனியார் நிறுவனம், இல. 424, காங்கேசன்துறை வீதி). 44 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5

12310 – கல்விப் பொதுத்தராதரப் பத்திரப் பரீட்சை (சாதாரணம்): 1978ஆம் ஆண்டு 10ஆந் தரத்துக்கான பாடத்திட்டம்.

கல்வி அமைச்சு. கொழும்பு: இலங்கை பரீட்சைத் திணைக்களம், கல்வி அமைச்சு, 1வது பதிப்பு, ஜனவரி 1978. (கொழும்பு: இலங்கை அரசாங்க அச்சகம், பரீட்சைத் திணைக்களம்). 87 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21X14 சமீ.

14446 க.பொ.த (உயர்தரம்) இணைந்த கணிதம்: ஏகபரிமாண உந்தமும் கணத்தாக்கும்.

தேசிய கல்வி நிறுவகம். மகரகம: விஞ்ஞான, கணித, சுகாதார, உடற்கல்விப் பிரிவு, கலைத்திட்ட அபிவிருத்தி நிலையம், தேசிய கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 2007. (பாதுக்க: அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனம், பானலுவ). vii, 35