12672 – இலங்கை மத்திய வங்கி: ஆண்டறிக்கை 2002.

இலங்கை மத்திய வங்கி. கொழும்பு 1: நாணயச் சபை, இலங்கை மத்திய வங்கி, இல. 30, சனாதிபதி மாவத்தை, 1வது பதிப்பு, ஏப்ரல் 2003. (கொழும்பு 12: ஜே.அன். எஸ் சேர்விசஸ் அச்சகம், இல. 115, மெசெஞ்சர் வீதி).

பகுதி 1: (28), 375 பக்கம், பகுதி 2: lxxxii, பகுதி 3: ciii பக்கம், பகுதி 4: cxxi பக்கம், 157அட்டவணைகள், விலை: ரூபா 200., அளவு: 27.5×20.5 சமீ., ISBN: 955-575- 076-9.

53ஆவது ஆண்டாகத் தயாரிக்கப்பட்டுள்ள 2002ம் ஆண்டுக்கான மத்திய வங்கியின் ஆண்டறிக்கை இதுவாகும். 4 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ள இவ்வறிக்கையின் முதலாவது பிரிவில் பொருளாதாரச் செயலாற்றம், தோற்றப்பாடு, விடயங்களும் கொள்கைகளும், தேசிய வருமானமும் செலவும், வேளாண்மை, மீன்பிடி மற்றும் காடாக்கல், கைத்தொழில், பொருளாதார மற்றும் சமூக நலன்புரிச் செலவுகள், விலைகளும் கூலிகளும், குடித்தொகை, தொழிற்படை மற்றும் தொழில் நிலை, இறைக் கொள்கையும் வரவுசெலவுத்திட்ட தொழிற்பாடுகளும், வர்த்தக, சென்மதி நிலுவை மற்றும் சுற்றுலா, நிதியியல்துறை என்பனவற்றின் பொருளாதார நிதிப் போக்குகள் என்பனவும் அறிக்கையிடப்பட்டுள்ளன. இரண்டாவது பிரிவில் இலங்கை மத்திய வங்கியின் கணக்குகளும் தொழிற்பாடுகளும், மூன்றாவது பிரிவில் 2002 நாணயச் சபையினால் மேற்கொள்ளப்பட்ட முக்கிய நிர்வாக நடவடிக்கைகளும், நான்காவது பிரிவில் 2002ம் ஆண்டு மத்திய வங்கி யினதும் இலங்கையிலுள்ள வங்கித் தொழில் நிறுவனங்களினதும் கடமைகளும் தொழிற்பாடுகளும் தொடர்பான 2002அம் ஆண்டின் முதன்மைச் சட்டவாக்கங்கள் பற்றிய அறிக்கை இடம்பெறுகின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 28927)

ஏனைய பதிவுகள்

Content 💰 Como Funcionam Os Pagamentos Mostbet Casino? [newline]como Levantar Dinheiro Na Mostbet? 🎁 Criptobónus Mostbet Рrоgrаmа Dе Lеаldаdе O Levantamento Dos Prémios Dos Jogadores