12673 – இலங்கை மத்திய வங்கி: ஆண்டறிக்கை 2003.

இலங்கை மத்திய வங்கி. கொழும்பு 1: நாணயச் சபை, இலங்கை மத்திய வங்கி, இல.30, சனாதிபதி மாவத்தை, 1வது பதிப்பு, 2004. (கொழும்பு 12: ஜே அன்ட் எஸ். சேர்விஸஸ் அச்சகம், 115 மெசெஞ்சர் வீதி).

(32), 406 பக்கம், cxiv, lxxxviii, cli, 165 அட்டவணைகள், விலை: ரூபா 200.00, அளவு: 28×20.5 சமீ., ISBN: 955-575-098-1.

நாணய விதிச் சட்டத்தின் (அத்தியாயம் 422) 35ஆம் பிரிவானது பொருளாதார நிலைமை, மத்திய வங்கியின் நிலைமை மற்றும் நாணயச் சபையினால் மேற்கொள்ளப்பட்ட கொள்கைகள், வழிமுறைகள் என்பன பற்றிய ஆய்வு மீதான ஆண்டறிக்கையை ஒவ்வொரு நிதியாண்டும் முடிவடைந்து நான்கு மாதங்களுக்குள் மத்திய வங்கியின் நாணயச்சபை நிதி திட்டமிடல் அமைச்சுக்கு அனுப்பிவைக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றது. அவ்வகையில் 54ஆவது ஆண்டாகத் தயாரிக்கப்பட்ட 2003ம் ஆண்டுக்கான ஆண்டறிக்கை இதுவாகும். 4 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ள இவ்வறிக்கையின் முதலாவது பிரிவில் பொருளாதாரச் செயலாற்றல், தோற்றப்பாடு, விடயங்களும் கொள்கைகளும், தேசிய வருமானமும் செலவும், வேளாண்மை, மீன்பிடி மற்றும் காடாக்கல், கைத்தொழில், பொருளாதார மற்றும் சமூக நலன்புரிச் செலவுகள், விலைகளும் கூலிகளும், குடித்தொகை, தொழிற்படை, மற்றும் தொழில் நிலை, இறைக் கொள்கையும் வரவுசெலவுத்திட்ட தொழிற்பாடுகளும், வர்த்தகம், சென்மதி நிலுவை மற்றும் சுற்றுலா, நிதியியல்துறை, கொடுப்பனவும் தீர்ப்பனவுகளும் ஆகிய விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. 2வது பகுதியில் இலங்கை மத்திய வங்கியின் கணக்குகளும் தொழிற்பாடுகளும் விளக்கப்பட்டுள்ளன. 3வது பிரிவில் 2003 நாணயச் சபையினால் மேற்கொள்ளப் பட்ட முக்கிய நிர்வாக நடவடிக்கைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. இறுதிப்பிரிவில் 2003இல் மத்திய வங்கியினதும் இலங்கையிலுள்ள வங்கித் தொழில் நிறுவனங்களினதும் கடமைகளும் தொழிற்பாடுகளும் தொடர்பான 2003மஆண்டின் முதன்மைச் சட்டங்கள் பற்றிய தகவல்களும் வழங்கப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 33792

ஏனைய பதிவுகள்

Rotiri Gratuite Fără Depunere

Content Wild wolf Rotiți gratuite fără depozit: Să Elementele De 50 Ş Rotiri Gratuite Queen Hearts Deluxe Pe Consemnare Ci Magazie Informații Suplimentare În care