12674 – இலங்கை மத்திய வங்கி: ஆண்டறிக்கை 2008.

. இலங்கை மத்திய வங்கி. கொழும்பு 1: நாணயச் சபை, இலங்கை மத்திய வங்கி, இல.30, சனாதிபதி மாவத்தை, 1வது பதிப்பு, 2009. (இரத்மலானை: சர்வோதய விஷ்வலேகா வெளியீடு, 41, லும்பினி அவென்யூ, பிரிவேனா வீதி முடிவு).

(30), 207 பக்கம், lxxii, cliii, xxix, 146 அட்டவணைகள், விலை: ரூபா 350.00, அளவு: 27×20.5 சமீ., ISBN: 978-955-575-171-1.

நாணய விதிச் சட்டத்தின் (அத்தியாயம் 422) 35ஆம் பிரிவானது பொருளாதார நிலைமை, மத்திய வங்கியின் நிலைமை மற்றும் நாணயச் சபையினால் மேற்கொள்ளப்பட்ட கொள்கைகள், வழிமுறைகள் என்பன பற்றிய ஆய்வு மீதான ஆண்டறிக்கையை ஒவ்வொரு நிதியாண்டும் முடிவடைந்து நான்கு மாதங்களுக்குள் மத்திய வங்கியின் நாணயச்சபை நிதி திட்டமிடல் அமைச்சுக்கு அனுப்பி வைக்கவேண்டும் என்பதை வலியுறுத்துகின்றது. அவ்வகையில் 59ஆவது ஆண்டாகத் தயாரிக்கப்பட்ட 2008ம் ஆண்டுக்கான ஆண்டறிக்கை இதுவாகும். 4 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ள இவ்வறிக்கையின் முதலாவது பிரிவில் பொருளாதாரம், விலை மற்றும் நிதியியல் முறைமை, உறுதித்தன்மை, தோற்றப்பாடு மற்றும் கொள்கைகள், தேசியஉற்பத்தியும் செலவினமும், பொருளாதார மற்றும் சமூக உட்கட்டமைப்பு, விலைகள் கூலிகள் தொழில்நிலை மற்றும் உற்பத்தித் திறன், வெளிநாட்டுத்துறை அபிவிருத்திகளும் கொள்கைகளும், இறைவரிக் கொள்கையும் அரச நிதியும், நாணயக் கொள்கை, பணம் கொடுகடன் மற்றும் வட்டி வீதங்கள், நிதியியல்துறை அபிவிருத்திகளும் முறைமை உறுதித் தன்மையும் ஆகிய விடயங்கள் அறிக்கையிடப்பட்டுள்ளன. பகுதி இரண்டில் இலங்கை மத்திய வங்கியின் கணக்குகளும் தொழிற்பாடுகளும் அறிக்கையிடப்பட்டுள்ளன. மூன்றாவது பகுதியில் 2008ஆம் ஆண்டில் நாணயச் சபையால் மேற்கொள்ளப்பட்ட முக்கிய நிர்வாக வழிமுறைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. இறுதிப் பகுதியில் மத்திய வங்கியினதும் இலங்கையிலுள்ள வங்கித் தொழில் நிறுவனங்களினதும் செயற்பாடுகளுடனும் தொழிற்பாடுகளுடனும் தொடர்பான 2008ஆம் ஆண்டின் முக்கிய சட்டவாக்கங்கள் என்பன பதிவுசெய்யப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 47087).

ஏனைய பதிவுகள்

Loki Casino Review

Ravi Critères Proposées De Prime, Encarts publicitaires, Tours Gratuits Au Salle de jeu Loki Players Lost All His Winnings Félin Slots Casino No Deposit Bonus