12677 – நிதி வளர நெறி இதுவே.

யோகி தம்பிராஜா, மரியா எட்வேட். கனடா ஆ5ளு 2று9: நிழல் வெளியீடு, ஜீவா பதிப்பகம், ரிப்ளக்ஸ் அச்சகம், 1108, பே வீதி, தொரன்ரோஇ 1வது பதிப்பு, ஆனி 1988. (கனடா ஆ5ளு 2று9: ஜீவா பதிப்பகம், ரிப்ளக்ஸ் அச்சகம், 1108, வே வீதி, தொரன்ரோ).

(12), 57 பக்கம், அட்டவணைகள், விலை: கனேடிய டொலர் 3.90, அளவு: 21×14 சமீ.

நிதி வளர்ச்சித் திட்டமிடல், வருமானம்-செலவு-சேமிப்பு, காலம் செய்யும் மாயம், முதலீட்டு நிதிகள், ஓய்வுகாலச் சேமிப்புத் திட்டம், கல்விக்கான சேமிப்புத் திட்டம், உயிர் காப்புறுதித் திட்டங்கள், உண்மையும் பொய்யும், நிதி வளர்ச்சித் திட்ட நிபுணர் ஆகிய எட்டு இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. கனடா வாழ் ஈழத்தமிழர் தமது உழைப்பு, செலவு, சேமிப்பு, முதலீடு போன்றவற்றையும் புதிய பாதையில் திருத்தியமைக்க வேண்டும் என்கிறார். வரிச்சுமை, பணவீக்கம், ஆகியவற்றில் இருந்து எமது சேமிப்பை எவ்வாறு காப்பாற்றலாம் என்றும், சேமித்த பணத்தை எவ்வாறு உழைக்கவைக்கலாம் என்பவற்றுக்கான வழிவகை களைக் கூறுவதாகவும் இந்நூல் அமைந்துள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 18462).

ஏனைய பதிவுகள்