12678 -பொது முதலீடு 1991-1995.

கொள்கை திட்டமிடல் அமுலாக்கல் அமைச்சு. கொழும்பு: தேசிய திட்டமிடல் திணைக்களம், கொள்கை திட்டமிடல் அமுலாக்கல் அமைச்சு, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1991. (கொழும்பு 12: குமரன் பதிப்பகம், 201, டாம் வீதி).

(4), 150 பக்கம், அட்டவணைகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×19 சமீ.

பொது முதலீட்டு திட்ட வரிசையில் 13ஆவதாக வெளியிடப்படும் 1991-1995ஆம் ஆண்டுக்கான இந்த வெளியீடு, இலங்கையின் பொருளாதாரம் புதுப்பிக்கப்பட்ட இயக்க ஆற்றலை வெளிப்படுத்தும் ஒரு காலப்பகுதியில் முன்வைக்கப்படுகின்றது. அடுத்த ஐந்தாண்டு காலத்திற்கான அரசாங்கத்தின் முழுமையான பொருளாதார உபாயத்தையும் கொள்கைகளையும் நிகழ்ச்சித் திட்டங்களையும் விளக்குகின்றது. இது ஒன்பது அத்தியாயங்களையும் அதைத் தொடர்ந்து புள்ளிவிபர அட்டவணை களையும் உள்ளடக்குகின்றது. இந்நூலின் அத்தியாயங்கள் பொருளாதார செயலாற்றலும் கண்ணோட்டமும், விவசாயம், கைத்தொழில்கள், பொருளாதார உட்கட்டமைப்பு, மனிதவள அபிவிருத்தி, மனித குடியேற்றங்கள், அரசதுறையினது மறுசீரமைப்பு, கிராமிய பிராந்திய அபிவிருத்தி, பொது முதலீட்டு நிகழ்ச்சித் திட்டம் 1991-1995 ஆகிய அத்தியாயத் தலைப்புகளைக் கொண்டுள்ளது. புள்ளிவிபர அட்டவணை அரச மூலதனச் செலவின ஒதுக்கீடு 1991-1995 என்ற தலைப்பில் 50 பக்கங்களில் தரப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 23622)

ஏனைய பதிவுகள்

14321 ரிஸானா நபீக்: மனச்சாட்சியின் படுகொலை.

A.B.M .இத்ரீஸ். வாழைச்சேனை 05: காகம் (உயிர்ப்பைத் தேடும் வேர்கள்) வெளியீடு, மஹ்மூட் ஆலிம் தெரு, 1வது பதிப்பு, 2013. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், இல. 44, புகையிரத நிலைய வீதி). 40 பக்கம், விலை:

14475 லங்கா சித்த ஆயுள்வேத மருத்துவக் கல்லூரியின் 75ஆவது ஆண்டு பவளவிழா மலர் 1925-2000.

இதழாசிரியர் குழு. யாழ்ப்பாணம்: லங்கா சித்த ஆயுள்வேத மருத்துவக் கல்லூரி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2003. (யாழ்ப்பாணம்: கரிகணன் பிரிண்டர்ஸ், 424, காங்கேசன்துறை வீதி). xx, 102 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு:

12297 – கல்வி உளவியல்(பாகம் 2): கற்றலும் கற்பித்தலும்.

ச.முத்துலிங்கம். கொழும்பு 3: பேராசிரியர் ச.முத்துலிங்கம், கல்வி உளவியல்துறை, கல்விப் பீடம், கொழும்புப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, ஜுலை 1980. (யாழ்ப்பாணம்: ஆசீர்வாதம் அச்சகம்). (4), 205-423 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 22.,

14955 செங்கதிர்: அமரர் சண்முகம் சிவலிங்கம் அஞ்சலிச் சிறப்பிதழ்.

செங்கதிரோன் (பிரதம ஆசிரியர்), அன்பழகன் குரூஸ் (துணைஆசிரியர்). மட்டக்களப்பு: த.கோபாலகிருஷ்ணன் (செங்கதிரோன்), இல. 19, மேல்மாடித் தெரு, 1வது பதிப்பு, மே 2012. (மட்டக்களப்பு: வணசிங்க அச்சகம், 126ஃ1, திருமலை வீதி). 66 பக்கம்,

14226 பிரம்மமாய் நின்ற சோதி.

கே.வி.குணசேகரம். கோப்பாய்: கே.வி.குணசேகரம், ஓய்வுபெற்ற கோட்டக் கல்விப் பணிப்பாளர், பிள்ளையார் கோவிலடி, கோப்பாய் மத்தி, 1வது பதிப்பு, மார்ச் 2010. (கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, கு.டு.1.14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர). viii, 86