12678 -பொது முதலீடு 1991-1995.

கொள்கை திட்டமிடல் அமுலாக்கல் அமைச்சு. கொழும்பு: தேசிய திட்டமிடல் திணைக்களம், கொள்கை திட்டமிடல் அமுலாக்கல் அமைச்சு, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1991. (கொழும்பு 12: குமரன் பதிப்பகம், 201, டாம் வீதி).

(4), 150 பக்கம், அட்டவணைகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×19 சமீ.

பொது முதலீட்டு திட்ட வரிசையில் 13ஆவதாக வெளியிடப்படும் 1991-1995ஆம் ஆண்டுக்கான இந்த வெளியீடு, இலங்கையின் பொருளாதாரம் புதுப்பிக்கப்பட்ட இயக்க ஆற்றலை வெளிப்படுத்தும் ஒரு காலப்பகுதியில் முன்வைக்கப்படுகின்றது. அடுத்த ஐந்தாண்டு காலத்திற்கான அரசாங்கத்தின் முழுமையான பொருளாதார உபாயத்தையும் கொள்கைகளையும் நிகழ்ச்சித் திட்டங்களையும் விளக்குகின்றது. இது ஒன்பது அத்தியாயங்களையும் அதைத் தொடர்ந்து புள்ளிவிபர அட்டவணை களையும் உள்ளடக்குகின்றது. இந்நூலின் அத்தியாயங்கள் பொருளாதார செயலாற்றலும் கண்ணோட்டமும், விவசாயம், கைத்தொழில்கள், பொருளாதார உட்கட்டமைப்பு, மனிதவள அபிவிருத்தி, மனித குடியேற்றங்கள், அரசதுறையினது மறுசீரமைப்பு, கிராமிய பிராந்திய அபிவிருத்தி, பொது முதலீட்டு நிகழ்ச்சித் திட்டம் 1991-1995 ஆகிய அத்தியாயத் தலைப்புகளைக் கொண்டுள்ளது. புள்ளிவிபர அட்டவணை அரச மூலதனச் செலவின ஒதுக்கீடு 1991-1995 என்ற தலைப்பில் 50 பக்கங்களில் தரப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 23622)

ஏனைய பதிவுகள்

Advertisements

It is well-laid aside with one to drop-down eating plan so you can navigate to the local casino, sporting events, cashier, benefits, VIP position, as