12679 – பொது முதலீடு 1992-1996.

கொள்கை திட்டமிடல் அமுலாக்கல் அமைச்சு. கொழும்பு: தேசிய திட்டமிடல் திணைக்களம், கொள்கை திட்டமிடல் அமுலாக்கல் அமைச்சு, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1992. (கொழும்பு 12: குமரன் பதிப்பகம், 201, டாம் வீதி).

(4), 250 பக்கம், அட்டவணைகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×18.5 சமீ.

அபிவிருத்தி செயற்றிட்டங்களுக்கான அரசாங்கத்தின் மூலவள ஒதுக்கீட்டினையும், அதனது அடிப்படையான பேரண்ட பொருளியல் மற்றும் துறைரீதியான கொள்கைகளையும் விளக்குவதற்காக, ஆண்டுதோறும் தயாரிக்கப்படும் பொது முதலீட்டு நிகழ்ச்சித் திட்டத் தொடரில் இது 14ஆவது வெளியீடாகும். 1988ம் ஆண்டின் அரசாங்க தேர்தல் விஞ்ஞாபனத்தில் வெளியிடப்பட்ட நோக்கங்களையும் தத்துவங்களையும் அதற்குப் பின்னால் மேற்கொள்ளப்பட்ட கொள்கைத் தீர்மானங்களையும் அடிப்படையாகக் கொண்டது. இவ்வெளியீடு பொருளாதாரச் செயலாற்றமும் கண்ணோட்டமும், விவசாயம், கைத்தொழில், பொருளாதார உட்கட்டமைப்பு, சனத்தொகைப் போக்குகளும் எதிர்நோக்குகளும், மளிதவள அபிவிருத்தி, வறுமை ஒழிப்பும் சமூக சேமநல நிகழ்ச்சித் திட்டங்களும், மானிட குடியேற்றங்கள், பொதுத்துறையின் மறுசீரமைப்பு, பொது முதலீடு 1992-1996, அரச மூலதனச் செலவின ஒதுக்கீடு 1992-1996 ஆகிய பதினொரு அதிகாரங்களைக் கொண்டது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 23615).

ஏனைய பதிவுகள்

14259 பனுவல்: சமூக பண்பாட்டு விசாரணை (இதழ் 7-2009).

கசங்க பெரேரா, தா.சனாதனன் (பிரதான தொகுப்பாசிரியர்கள்). கொழும்பு 8: சமூக பண்பாட்டு விசாரணைக்கான கூட்டிணைப்பு, சமூக, பண்பாட்டு உயர் கற்கைகளுக்கான கொழும்பு நிறுவனம், 119யு, கிங்ஸ் வீதி, 1வது பதிப்பு, 2009. (யாழ்ப்பாணம்: கரிகணன்

12856 – வாய்மையின் வெற்றி: ஆராய்ச்சிக் கட்டுரைகள்.

ம.முஹம்மது உவைஸ். நுகெகொடை: ம.முஹம்மது உவைஸ், தமிழ்த்துறைத் தலைவர், வித்தியோதய பல்கலைக்கழகம், கங்கொடவில, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (காலி: அல்பியன் பதிப்பகம், 9 மாத்தறை வீதி). (6), 113 பக்கம், விலை:

14558 அடையாளமற்றிருத்தல்.

சம்பூர் வதனரூபன். சென்னை 600024: வடலி வெளியீடு, F-1, ஸ்ரீவாரி பிளாட்ஸ், 8A, அழகிரி நகர் 4வது குறுக்குத் தெரு, லட்சுமிபுரம், வடபழனி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2013. (அச்சக விபரம் தரப்படவில்லை). 96