12681 – அடிப்படைச் சந்தைப்படுத்தல்: உயர்தர வகுப்புகளுக்குரியது.

தேவராஜன் ஜெயராமன். யாழ்ப்பாணம்: ஸ்ரீராம் பதிப்பகம், 392ஃ2, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, ஜுலை 1994. (கொழும்பு 5: சரசு பப்ளிக்கேஷன்ஸ், 215னு,2/8 பார்க் வீதி).

72 பக்கம், விலை: ரூபா 40., அளவு: 21.5×14 சமீ.

உயர்தர வகுப்புகளில் வர்த்தகமும் நிதியும் என்ற பாடத்திட்டத்தில் சந்தைப்படுத்தல் ஒரு பிரதான பாடமாகும். வர்த்தகமும் நிதியும் வினாத்தாள்-1இல் இரண்டு வினாக்கள் சந்தைப்படுத்தல் தொடர்பாக கேட்கப்பெறுவது வழமை. இந்நூல் சந்தைப்படுத்தல் தொடர்பாக உயர்தர வகுப்பு மாணவர் அறிந்திருக்கவேண்டிய அறிவை ஒன்பது இயல்களில் விளக்குகின்றது. சந்தைப்படுத்தல், சந்தைகள், சந்தைப்படுத்தல் கலவை, சந்தைத் துண்டமாக்கல், விலையிடல் விநியோகம், மேம்படுத்தல் கலவை, சந்தை ஆராய்ச்சி சர்வதேச சந்தைப்படுத்தல் ஆகிய தலைப்புகளில் இவ்வலகுகள் வகுத்து விரிவாக விளக்கப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 42121).

ஏனைய பதிவுகள்

12732 – மாணாக்கரின் காந்தி.

ஆர்.பாலகிருஷ்ணன்,T.L.M.புஹாரி. கொழும்பு 13: இளம்பிறை எம்.ஏ.ரகுமான், அரசு வெளியீடு, 231 ஆதிருப்பள்ளித் தெரு, 1வது பதிப்பு, 1969. (கொழும்பு 13: ரெயின்போ பிரிண்டர்ஸ், 231 ஆதிருப்பள்ளித் தெரு). (4), 67 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை,

12051 – ஈழத்திருநாட்டின் திரௌபதி வழிபாடுகள்.

உடப்பூர் வீரசொக்கன். உடப்பு: இளம் தாரகை வட்டம், 1வது பதிப்பு, ஜுலை 2017. (அச்சக விபரம் தரப்படவில்லை). xiii, 59 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 215., அளவு: 21×14.5 சமீ. சக்தி வழிபாடுகள்

14164 மண்ணவரும் விண்ணவரும் மகிழ்ந்த மகாகும்பாபிஷேகம்: ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி கோயில்-1993.

மலர்க்குழு. கொழும்பு: ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி கோயில், ஸ்ரீ கதிரேசன் வீதி, 1வது பதிப்பு, மார்ச் 1993. (கொழும்பு: மெய்கண்டான் அச்சகம், 161, செட்டியார் தெரு). (2), 112 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை:

12829 – மீண்டும் வசந்தம்.

திருமலை வீ.என்.சந்திரகாந்தி. திருக்கோணமலை: ஜெயகாந்தி கலை கலாச்சார விளையாட்டு மேம்பாட்டுக் கழகம், 572/A, ஏகாம்பரம் வீதி, 1வது பதிப்பு, டிசம்பர் 2004. (திருக்கோணமலை: ரெயினிபோ மினிலாப், 361, நீதிமன்ற வீதி). 200 பக்கம், விலை:

12018 சிறுவர் உளநலம் : ஆரம்பப் பாடசாலை மாணவர்களுக்கு உதவும் ஆசிரியர் கைந்நூல்.

சா.சிவயோகன், கோகிலா மகேந்திரன், தயா சோமசுந்தரம். யாழ்ப்பாணம்: சாந்திகம், 15, கச்சேரி-நல்லூர் வீதி, 2வது பதிப்பு, ஜுலை 2005, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2002. (கொழும்பு: பிரின்ட் கெயார் பக்கேஜிங் லிமிட்டெட், 21, ஸ்ரீ

14901 சித்தாந்தபாநு சோ.சுப்பிரமணியக் குருக்கள் பாராட்டுவிழா மலர்.

ச.பஞ்சாட்சர சர்மா (மலர் ஆசிரியர்). கோப்பாய்: குருக்கள் பாராட்டுவிழாச் சபை, 1வது பதிப்பு, 1971. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ லங்கா புத்தகசாலை, 234, காங்கேசன்துறை வீதி). (10), 84 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை,