தேவராஜன் ஜெயராமன். யாழ்ப்பாணம்: ஸ்ரீராம் பதிப்பகம், 392ஃ2, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, ஜுலை 1994. (கொழும்பு 5: சரசு பப்ளிக்கேஷன்ஸ், 215னு,2/8 பார்க் வீதி).
72 பக்கம், விலை: ரூபா 40., அளவு: 21.5×14 சமீ.
உயர்தர வகுப்புகளில் வர்த்தகமும் நிதியும் என்ற பாடத்திட்டத்தில் சந்தைப்படுத்தல் ஒரு பிரதான பாடமாகும். வர்த்தகமும் நிதியும் வினாத்தாள்-1இல் இரண்டு வினாக்கள் சந்தைப்படுத்தல் தொடர்பாக கேட்கப்பெறுவது வழமை. இந்நூல் சந்தைப்படுத்தல் தொடர்பாக உயர்தர வகுப்பு மாணவர் அறிந்திருக்கவேண்டிய அறிவை ஒன்பது இயல்களில் விளக்குகின்றது. சந்தைப்படுத்தல், சந்தைகள், சந்தைப்படுத்தல் கலவை, சந்தைத் துண்டமாக்கல், விலையிடல் விநியோகம், மேம்படுத்தல் கலவை, சந்தை ஆராய்ச்சி சர்வதேச சந்தைப்படுத்தல் ஆகிய தலைப்புகளில் இவ்வலகுகள் வகுத்து விரிவாக விளக்கப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 42121).