12690 – கர்நாடக சங்கீதம்.

தேசிய கல்வி நிறுவகம். மகரகம: நுண்கலைத் துறை, தேசிய கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 1992. (கொழும்பு 13: யுனைட்டெட் மேர்ச்சன்ட்ஸ்லிமிட்டெட்).

(8), 115 பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21 x 14.5 சமீ.

தேசிய கல்வி நிறுவக நுண்கலைத் துறையின் அழகியற் கலைப்பிரிவுப் பணிப்பாளர் திருமதி மிரண்டா ஹேமலதாவின் வழிகாட்டலின்கீழ் எஸ். கணபதிப்பிள்ளை, எஸ்.திலகநாயகம் போல், செல்வி யோ.செல்லையாபிள்ளை, திருமதி வனஜாஸ்ரீனிவாசன், செல்வி ஆர்.நடராஜா, திருமதி மீரா உதயசங்கர் ஆகியோரை ஆசிரியர் குழுவாகக்கொண்டு இந்நூல் எழுதப்பட்டுள்ளது. இதில் கலை விளக்கம், கர்நாடக சங்கீதம், ஸப்த தாளங்களும் அதன் விபரமும், உருப்படிகள், ஜனக ஜன்ய ராகங்கள், இசைக் கருவிகள், ஈழத்துக் கிராமியப் பாடல்கள், பாடத்திட்டம் தரம் 9 ஆண்டு 10,பாடத்திட்டம் தரம் 10 ஆண்டு 11, தானவர்ணங்கள், எழுபத்திரண்டு மேளகர்த்தா சக்கரம் ஆகிய தலைப்புகளில் பாடங்கள் வகுத்துத்தரப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 38255).

ஏனைய பதிவுகள்