12695 – ஸெளந்தர்யலஹரிக் கீர்த்தனாஸதகம்.

மா.த.ந.வீரமணி ஐயர். யாழ்ப்பாணம்: மா.த.ந.வீரமணி ஐயர், விரிவுரையாளர், இராமநாதன் நுண்கலைக்கழகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, ஏப்ரல் 1997. (யாழப்பாணம்:ஸ்ரீ
சாயி அச்சகம், இணுவில்).

xlvi, 102 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5 x 14 சமீ.

ஸெளந்தர்யலஹரிக் கீர்த்தனாஸதகம் ஸ்ரீமத் ஆதிசங்கர பகவத்பாதர் அருளியதாகும். கலாபூஷணம், கவிமாமணி இணுவில் பிரம்மஸ்ரீ மா.த.ந.வீரமணி ஐயர் அவர்களால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது. ‘ஸெளந்தர்யலஹரி” தெய்வத்திடமிருந்து தெய்வ மனிதரான ஆதிசங்கரருக்கு வழங்கப்பட்டதென்பர். அம்பாளின் அருளழகு, ஆட்சி அழகு, மாட்சியழகு, காட்சியழகு, கருணையழகு, கடைக்கண்ணழகு, கழலழகு, பேச்சழகு எனப் பல அழகின் அலைகள் இன்ப வெள்ளமாகப் பெருகும் இசைப்பாடல்களாக இவை விளங்குகின்றன. அம்பாளின் உடல் அழகை வர்ணித்து எமது உள்ளத்தின் அழகைப் பெருக்கும் கவிகள் இவை. இது ஸ்ரீமதிவீரமணி ஐயர் ருக்மணி அம்மாள் அவர்களின் ஆத்மசாந்தி மலராக இணுவில் வட்டுவினி தர்மஸாஸ்தா குருகுலம் காயத்ரிபீடம் ஸ்ரீ கண்ணகாபரமேஸ்வரி அம்பாளின் பாதாரவிந்தங்களில் சமர்ப்பிக்கப்பட்டது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 23265).

ஏனைய பதிவுகள்

Casino Bonus Ohne Einzahlung 2024 Neu

Content Warum Casinos 50 Ohne Einzahlung Bonus Codes Vergeben Casino Kingdom Multi Spiele Von Merkur Stöbern Sie nun im sizzling-hot-deluxe-777.com vorteilhafter Link Sortiment des Casinos