12699 – தமிழர் அறிகையும் பரத நடனமும்.

சபா ஜெயராஜா. யாழ்ப்பாணம்: போஸ்கோ வெளியீடு, நல்லூர், 1வது பதிப்பு, 2002. (யாழ்ப்பாணம்: போஸ்கோ ஆர்ட்ரோன்பிரிண்டர்ஸ்).

(6), 69 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: ரூபா 100., அளவு: 20.5 x 14.5 சமீ.

பரத நாட்டியம் தொடர்பாக முன்னர் கொழும்புத் தமிழ்ச் சங்கத்திலும் பின்னர் பெருமாட்டி லீலாவதி இராமநாதன் நினைவுச் சொற்பொழிவாக யாழ்பாணப் பல்கலைக்கழகத்திலும் நிகழ்த்திய இருவேறு சொற்பொழிவுகளை ஆதாரங்களாகக் கொண்டு இந்நூலாக்கம் இடம்பெறுகின்றது. தொன்மங்களும் நடன ஆக்கமும், தில்லை அம்பலத்து ஆடல், சிவதாண்டவங்களும் பரத நடனமும், பரத நடனமும் கலையறிகைக் கோலமும், பரத நடனமும் பெண் தெய்வ வழிபாடும் ஆகிய ஐந்து இயல்களில் இந்நூல் ஆக்கப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 33006. நூலகம்
நிறுவன இணையத்தள நூலகத்தின் சேர்க்கை இலக்கம் 009934).

ஏனைய பதிவுகள்

The newest Trend Out of Pets And Success

Blogs Greatest Charities To own Residential Cats Complete 2024 Checklist Houlton Civilized People Fairfax County Dog shelter The newest Worcester Animal Rescue Group Atlantic City