12701 – அரங்க நிர்மாணம்: நாடகமும் அரங்கியலும்: மாணவர் கைந்நூல்.

கந்தையா ஸ்ரீகந்தவேள். வவுனியா: சண்முகலிங்கம் கல்வியியல் அரங்கு, 1வது பதிப்பு,
ஆனி 2009. (வவுனியா: மல்ரிவிஷன் அச்சுக் கலையகம், இல. 77, முதலாம் குறுக்குத் தெரு).

60 பக்கம், விளக்கப்படங்கள், புகைப்படங்கள், விலை: ரூபா 150., அளவு: 20.5 x 14.5 சமீ.

நாடகமும் அரங்கியலும் என்னும் துறையானது ஒரு கற்கைநெறியாக இலங்கை கல்வித் திணைக்களத்தினால் 1978இல் அதன் பாடத்திட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. க.பொ.த. சாதாரண, உயர்தர மாணவர்களின் பாடத்தேவையை பூர்த்திசெய்யும் வகையில் இந்நூல் அரங்க நிர்மாணம் பற்றி விளக்கமளிக்கின்றது. நாடகபாடம், அரங்க வெளி, காட்சி விதானிப்பு, அரங்கத் திரை, ஒளிவிதானிப்பு, வேட உடை விதானிப்பு, ஒப்பனை, வேடமுகம், அரங்கிற்கான இசை, அரங்கிற்கான நடனம், மேடைப் பொருட்கள், கைப்பொருட்கள், அரங்கப் பொறிகள், அரங்கத்தொழில்நுட்பம், பெருங்காட்சி, பார்ப்போர், நடனக் கோலம், அரங்கியலாளர்கள் ஆகிய தலைப்புகளின்கீழ் அரங்க நிர்மாணம் தொடர்பான விரிவான விளக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன. நூலாசிரியர் ஸ்ரீகந்தவேள், வவுனியா பண்டாரிக்குளம் வ/விபுலாநந்தாக் கல்லூரியின் ஆசிரியராவார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 56223).

ஏனைய பதிவுகள்