வனிதா சுரேஸ்.
களுவாஞ்சிக்குடி: திருமதி வனிதா சுரேஸ், வாகரையார் வீதி, களதாவளை-1,
1வது பதிப்பு, தை 2006. (மட்டக்களப்பு: நியூ கீன் அச்சகம், 73, முனை வீதி).
v, 62 பக்கம், விலை: ரூபா 125.00, அளவு: 20 x 15 சமீ.
க.பொ.த. தரத்தில் ‘நாடகமும் அரங்கியலும்” ஒரு பாடமாகக் கற்கும் மாணவர்களின் பாடத் தேவையைப் பூர்த்திசெய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்நூலில் ஈடிபஸ், ஒதல்லோ, பொம்மை வீடு, செறித் தோட்டம், மாணிக்கமாலை, இராம நாடகம், ஏழு நாடகங்கள் ஆகிய தலைப்புகளில் அரங்கியல் பாடங்கள் ஒழுங்குபடுத்தப்பட்டு கதைச்சுருக்கம், வினாக்கள், விடைகள், படங்கள் என்பன விளக்கமளிக்கப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 38516).